ஆழ்ந்த மயக்கத்திலிருந்து சாமிநாதனுக்கு
விழிப்பு வந்ததும் முதல் கணம் ரத்தம் வழிய விழுந்துகிடந்த காட்சிதான் நினைவுக்கு வந்தது.
அருகில் “என்னங்க, என்னங்க” என்றொரு துயர் மிகுந்த பெண்குரல் கேட்டது. ”பயப்படாதீங்க.
மனசுக்குள்ள வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்னு சொல்லிட்டே இருங்க” என்றது. அவர் கால்கள்
ரத்தத்தில் நனைந்த மரக்கட்டைகள்போல அருகில் இருந்தன. காட்சிகள் குழம்பிக் கலைந்து விலக
வேதனையுடன் விழிகள் மீண்டும் மூடி சில கணங்களுக்குப் பிறகு திறந்தன. அறை முழுதும் பல
படுக்கைகள் இருப்பதையும் ஒவ்வொன்றிலும் ஒருவர் படுத்திருப்பதையும் பார்த்தார் சாமிநாதன்.
Thursday, 29 September 2016
Friday, 23 September 2016
மீசைக்காரப்பூனை தொகுதியிலிருந்து சில பாடல்கள்
தக்காளியின் கதை
கொழுக்கு முழுக்கு தக்காளிக்கு
கால் முளைத்ததாம்
கூடத்திலிருந்து வாசலுக்கு
துள்ளிக் குதித்ததாம்
துள்ளிக் குதித்த தக்காளி
தூணில் இடித்ததாம்
தூணிலிருந்து சுவரை நோக்கி
உருண்டு போனதாம்
முப்பத்தெட்டு மேதைகள் - (கட்டுரை)
சில மாதங்களுக்கு முன்பாக தமிழ்ச்சங்க நூலகத்தில் புத்தகத்தாங்கிகளில் படிந்திருக்கும் ஒட்டடையையும் தூசையும் துடைத்து, புத்தகங்களை வரிசைப்படுத்தி அடுக்கிவைக்கும் வேலை பகுதிபகுதியாக நடந்துகொண்டிருந்தது. அதனால் பல நாட்களாக அந்தப் பக்கமாக செல்லவே இல்லை. போன வாரம் சென்றிருந்தபோது தூய்மைப்படுத்தும் வேலை முற்றிலும் முடிந்து நூலகமே புதுக்கோலத்தில் காட்சியளித்தது. எல்லாத் தாங்கிகளும் பளிச்சென்றிருந்தன.
எழுத்தாளர்களுடைய பெயர்களின் அகரவரிசைப்படி புத்தகங்களை அடுக்கி வைத்திருந்தார்கள். பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.
Thursday, 22 September 2016
மீசைக்காரப்பூனை - சிறுவர் பாடல் தொகுதி
முன்னுரை
ஒரு நாள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தேன்.
எனக்கு எதிரில் அம்மா, அப்பா, இரு பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பம் உட்கார்ந்திருந்தது.
கோடை விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் கோவாவுக்குச் செல்கிறார்கள் என்பதை அவர்களுடைய
உரையாடலிலிருந்து நானே புரிந்துகொண்டேன். இரண்டு பிள்ளைகளும் மாறிமாறி தம் அம்மாவிடமும்
அப்பாவிடமும் கேள்விகள் கேட்டபடியே இருந்தார்கள். பெரியவனுக்கு ஆறு வயதும் சின்னவனுக்கு
நான்கு வயதும் இருக்கலாம். நீண்ட நேரம் அவர்களுடைய
உரையாடல் தொடர்ந்தபடியே இருந்தது.
ஒளி குன்றாத புள்ளிகள் - வண்ணநிலவனின் சிறுகதைகள்
காலை நேரத்தில் அலுவலகத்துக்குச் செல்ல பேருந்து நிறுத்தத்தில் நான் நின்றிருக்கும்போது தினந்தோறும் ஒரு பெரியவரைப் பார்ப்பேன். இரண்டடிக்கு மூன்றடி அளவுள்ள பைகளை கைக்கு ஒன்றாகத் தூக்கிக்கொண்டு மிகமிக மெதுவாக நடந்து வருவார். இரண்டு பைகளிலும் எலுமிச்சை, தயிர்ச்சோறுப் பொட்டலங்கள். சுமை தாங்கமுடியாமல் இருபது முப்பது அடிகளுக்கு ஒருமுறை பைகளைத் தரையில் வைத்துவிட்டு சிறிதுநேரம் நிற்பார். இறுகிவிடும் கைவிரல்களைத் தளர்த்தி ஊதிவிட்டுக்கொள்வார். வலது கையால் இடதுதோளையும் இடதுகையால் வலதுதோளையும் மாறிமாறிப் பிடித்துக்கொள்வார். இரண்டு கைகளையும் இடுப்புக்குப் பின்னால் அழுத்தியபடி கழுத்தை அண்ணாந்து மடக்குவார். ஆசுவாசமடைந்த பிறகு மீண்டும் பைகளை எடுத்துக்கொண்டு நடக்கத் தொடங்குவார். இரண்டுமூன்று கட்ட ஓய்வுகளுக்குப் பிறகு நிறுத்தத்துக்கு வந்து சேர்வார். நெற்றியில் முத்துமுத்தாகத் தேங்கி நிற்கும் வியர்வைத் துளிகளை கைக்குட்டையால் ஒற்றி எடுத்தபிறகு வலிக்கும் கைகளை உதறித் தளர்த்திக்கொள்வார். இப்படி கைகளை உதறியும் கால்களை நீவிவிட்டுக்கொண்டும் கழுத்தை நிமிர்த்தித் திருப்பியும் சுமைவலியிலிருந்து சற்றே நிவாரணமடைந்து மீண்டும் சுமந்துசெல்ல முயற்சி செய்யும் முதியவர்களும் பெண்களும் சிறுவர்களும் நகரத்தில் பல இடங்களில் பார்வையில் தினந்தோறும் பட்டபடி இருக்கிறார்கள். சுமைவலி என்பது ஒருவகையில் வாழும் வலி. அது அவர்களுடைய ஒவ்வொரு அசைவிலும் வெளிப்பட்டபடி இருக்கிறது. வாழும் வலியால் தவிப்பவர்கள் காலம்காலமாக நகரின் விளிம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறார்கள். எந்தப் பெரிய வெற்றியையும் பற்றிய கனவுகள் அவர்கள் நெஞ்சில் இல்லை. நிம்மதியாக ஒருநாள் பொழுது கழிந்தால் போதும் என்று இருப்பவர்கள் அவர்கள். ஒவ்வொரு கணமும் வலியோடு வாழ்ந்து மறைபவர்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டக்கூடும். நகரத்துக்கோ அல்லது உலகத்துக்கோ, ஒருபோதும் அவர்கள் முகங்கள் நினைவில் இருப்பதில்லை. ஆனால் அவர்களுடைய தடங்கள் எழுத்துலகில் காணக்கிடைக்கின்றன. முக்கியமாக வண்ணநிலவனின் கதைகளில்.
இரண்டு யுகங்களுக்கிடையில் - ‘சூல்’ நாவல் அறிமுகம்
சுதந்திரத்துக்கு முந்தைய, கட்டபொம்முவின்
காலத்துக்கும் முந்தைய எட்டயபுரம் சமஸ்தான
அரசுக்குக் கட்டுப்பட்ட உருளைக்குடியைச் சேர்ந்த கண்மாய் படிப்படியாக அதன் மதிப்பை இழந்து, இறுதியில் மக்களாட்சியில்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் வறண்டு பராமரிக்கப்படாமல்
முள்ளடர்ந்த காடாக மாறுவதுதான் இந்நாவலின் கதைக்களம். தம் வாழ்நாளில் அற உணர்ச்சியால்
மட்டுமே வழிநடத்தப்பட்ட ஆறேழு நீர்ப்பாய்ச்சிகளைக் கண்ட கண்மாய் அற உணர்ச்சியே அற்ற
மக்களாட்சிப் பிரதிநிதியின் நிர்வாகத்துடைய சுயநலத்தால் ஒரே தலைமுறையில் அழிந்துபோகிறது.
ஆட்சி செய்யும் ஒரு நிர்வாகம் அற உணர்வை கைவிடும்போது, இயற்கை நீர்நிலைகளைக் கைவிட்டுவிடுகிறது.
Monday, 12 September 2016
பாதையும் பயணமும் - அ.ராமசாமியின் கட்டுரைத்தொகுதிக்கு எழுதிய முன்னுரை
ஒரு சிறுகதையை நல்ல சிறுகதை
என்றும் சாதாரணச் சிறுகதை என்றும் வகுத்துப் பார்க்கிற தேவையைப்பற்றிய உரையாடல், நவீன
சிறுகதை எழுதப்பட்ட காலத்திலிருந்தே தொடங்கிவிட்டது. நவீனச் சிறுகதைகளின் தொடக்கப்புள்ளியாகக்
கருதப்படும் புதுமைப்பித்தனே அந்த உரையாடலையும் தொடங்கிவைத்தார். க.நா.சு. நல்ல சிறுகதையாசிரியர்களை
தொடர்ச்சியாகப் பட்டியலிட்டுக் காட்டியபடியே இருந்தார். தமிழ் இலக்கிய விமர்சனம் என்பது
இந்த உரையாடல்கள் வழியாகவே மெல்ல மெல்ல உருப்பெற்றது. அதன் விளைவாக, சிறுகதைகளுக்குரிய
அழகியல் அலகுகளும் விமர்சனப் பார்வையும் சிறுகச்சிறுக திரண்டெழத் தொடங்கின.
ஆல்பர்ட் என்னும் ஆசான் - புத்தக அறிமுகம்
கடந்த ஆண்டு அக்டோபர் மாத காலச்சுவடு
இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய
கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர
ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட
ஒரு கடிதத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற சிறுகதைப்பட்டறையில் கலந்துகொண்ட நினைவுகளின்
பதிவை சு.ரா. எழுதியிருக்கிறார். பட்டறையில் கலந்துகொள்ளும்படி அழைத்தவர் ஆல்பர்ட்
என்பதால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரியப்படுத்துகிறார். சு.ரா. போன்ற ஆளுமை
மதித்த ஆளுமையாக ஆல்பர்ட் விளங்கியிருக்கிறார். நாகர்கோவில் பகுதியில் இயங்கிய சிந்தனை
மையமாக சுந்தர ராமசாமி விளங்கிய சமயத்தில் திருச்சி பகுதியில் சிந்தனை மையமாக விளங்கியவர்
ஆல்பர்ட். அவர் படைப்பாளி அல்ல. ஆனால் நல்ல படைப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய
நுண்ணுணர்வு கொண்டவர். நல்ல சிறுகதை, நல்ல நாவல், நல்ல கவிதை, நல்ல திரைப்படம், நல்ல
நாடகம் என ஒவ்வொன்றைப்பற்றியும் மீண்டும்மீண்டும் பேசி தன்னைச் சூழ இருந்தவர்கள்மீது
தாக்கத்தை ஏற்படுத்தியவர்.
Labels:
அம்ஷன்குமார்,
அற்புதராஜ்,
ஆல்பர்ட்,
கோ.ராஜாரம்
Subscribe to:
Posts (Atom)