இரண்டு
முப்பத்தாறு நாற்பத்தியேழு சீரான வேகத்தில் திருப்பதிச் சாலையில் போய்க்கொண்டிருந்தது. மடங்கி மடங்கி நிழல்கள் விழுகிற இரவில் முதுகு வளைக்காமல் ஸ்டியரிங் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டுகிற தாஸின் தோரணை ஒரு ரிஷிகுமாரனைப் போல இருந்தது குமரேசனுக்கு.
இரண்டு
முப்பத்தாறு நாற்பத்தியேழு சீரான வேகத்தில் திருப்பதிச் சாலையில் போய்க்கொண்டிருந்தது. மடங்கி மடங்கி நிழல்கள் விழுகிற இரவில் முதுகு வளைக்காமல் ஸ்டியரிங் முன்னால் அமர்ந்து வண்டி ஓட்டுகிற தாஸின் தோரணை ஒரு ரிஷிகுமாரனைப் போல இருந்தது குமரேசனுக்கு.
இந்தியா முழுதும் மக்கள் ஆதரவுடன் ஒத்துழையாமை இயக்கம் பரவி நன்கு வேரூன்றிவிட்ட தருணத்தில் காந்தியடிகள் 15.09.1921 அன்று சென்னைக்கு வந்தார். அடுத்தநாள் மாலை கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்று, கதராடைகளை அணிதல், வெளிநாட்டுத் துணிகளை விலக்குதல், தீண்டாமை ஒழிப்பு, மது விலக்கு ஆகிய திட்டங்களைப்பற்றி விரிவாக உரையாற்றினார். ”நம்மிடையே வாழும் ஐந்தில் ஒரு பகுதியினரை நாம் தீண்டத்தகாதவர்களாக நடத்துவதை விட்டொழிக்கும்போதுதான் உலகம் முழுவதும் நம்மைத் தீண்டத்தகாத தொழுநோயர்களைப்போல நடத்தும் முறையும் ஒழியும்” என்று உறுதியான குரலில் தெரிவித்தார்.
ஒன்று
கீழுதட்டை விரலால் மடித்து இழுப்பதையும் விடுவிப்பதையும் ஒரு விளையாட்டு மாதிரி செய்தபடி ஒர்க்ஷாப் பின் வாசலில் நின்றிருந்தான் குமரேசன்.
தினத்தந்தி நாளேட்டில் பணிபுரிந்த மூத்த பத்திரிகையாளரான ஐ.சண்முகநாதன் தனது 90வது வயதில் 03.05.2024 அன்று இயற்கையெய்தினார். பதினெட்டு வயதில் தினத்தந்தி அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த சண்முகநாதனை, வழக்கமான பணிநிறைவுக்காலத்துக்குப் பிறகு அவருடைய இறுதிக்காலம் வரைக்கும் தினத்தந்தி நிர்வாகம் தன் குழுமத்தில் ஒருவராகவே மதிப்புடன் வைத்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, பிற மாநிலங்களில் கூட இப்படி பத்திரிகையாசிரியர் ஒருவரை ஒரு பத்திரிகை நிறுவனம் கொண்டாடியிருக்குமா என்பது ஐயத்துக்குரிய செய்திதான். அந்த அளவுக்கு நிறுவனத்தின் மீது பற்றுள்ளவராக சண்முகநாதனும் அவர்மீது பற்றுள்ளவர்களாக நிறுவனத்தினரும் நடந்துகொண்டிருக்கிறார்கள். ஒரு விதையை மண்ணில் ஊன்றி முளைக்கவைத்து, செடியாக்கி, மரமாக்கி, ஓங்கி உயர்ந்து நிற்கவைப்பதுபோல தினத்தந்தியின் திருச்சி பதிப்பை மக்கள் நெஞ்சில் நிலைநிறுத்திவர் சண்முகநாதன்.
(அசாமைச் சேர்ந்த எழுத்தாளரான மமாங் தய் ஆங்கிலத்தில் எழுதிய நாவலை ‘கருங்குன்றம்’ என்னும் தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்தமைக்காக சாகித்திய அகாதெமி வழங்கும் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான விருதை(2023) பெற்றவர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி. அவர் ஒருங்கிணைந்த அந்நாளைய தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த திருமருகல் என்னும் சிற்றூரில் கண்ணையன் – சிங்காரவள்ளி இணையருக்கு மூத்த மகனாக 1962இல் பிறந்தார். புகுமுக வகுப்பு வரையில் தமிழ்வழியிலேயே கல்வி கற்ற அவர் பொருளாதாரத்திலும் தமிழ் இலக்கியத்திலும் முதுகலைப் பட்டங்களும் சட்டவியலில் இளநிலைப்பட்டமும் பெற்றார். இந்திய செய்திப்பணியில் இளநிலை அலுவலராகப் பணியாற்றிய காலத்தில் ஆங்கிலச்செய்திகளை உடனுக்குடன் தமிழில் மொழிபெயர்த்ததன் வழியாக அடைந்த அனுபவம் மெல்ல மெல்ல பல துறைசார் நூல்களையும் புனைவுநூல்களையும் மொழிபெயர்க்கும் ஆற்றல் கொண்டவராக மலர வைத்தது.
வெ.சாமிநாத சர்மா எழுதிய ‘எனது பர்மா வழிநடைப்பயணம்’ புத்தகத்தைப் படித்துமுடித்ததும் மனம் கனத்துவிட்டது. இன்று, இரண்டாம் உலகப்போர் என்பது நம்மைப் பொறுத்தவரையில் ஒரு வரலாற்றுத்தகவல். ஆனால் போர் நிகழ்ந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்களுக்கோ உயிர்ப்பிரச்சினை. ஜப்பானிய போர்விமானங்கள் ரங்கூன் நகரத்தின் மீது குண்டுவீசித் தாக்கியபோது, அங்கே வாழ்ந்துவந்த ஏராளமான தமிழர்கள் தம் உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நகரத்தைவிட்டு உடனடியாக வெளியேறி பதுங்கு குழிகளில் வாசம் செய்தனர். பிறகு அகதிகளாக அங்கிருந்து தப்பினார்கள். ஆங்கில ஆட்சிக்கு நெருக்கமானவர்கள் விமானம் வழியாகவும் கப்பல் வழியாகவும் வெளியேற, எந்தத் தொடர்புமற்றவர்கள் நடந்தே வெளியேறினார்கள். கடுமையான குளிரில் காட்டுப்பகுதி வழியாக இரண்டு மாதம் பயணம் செய்து கல்கத்தாவுக்குள் நுழைந்தனர். அகதியோடு அகதியாக பர்மாவிலிருந்து வெளியேறியவர்களில் வெ.சாமிநாதசர்மாவின் குடும்பமும் ஒன்று. தம் சொந்த வாழ்வனுபவத்தையே அவர் நூலாக எழுதியுள்ளார்.
அர்ச்சனாவின் திருமணம் சிறப்பாக நடந்தது. ரோஜாப்பூ மாலையுடன் திருமண ஒப்பனையில் அர்ச்சனா மிகவும் அழகாக இருந்தாள். மணமேடையில் அமர்ந்திருந்த போதும் அலுவலக ஆட்களை அவள் புன்னகையோடு கைகுவித்து வணங்கி வரவேற்ற விதம் அழகாக இருந்தது.
”சிவராத்திரி முடிஞ்ச பிறகு குளிர்காலம் சிவசிவான்னு மறைஞ்சி போயிடும்” என்று பெங்களூரில் பொதுவாகப் பேசிக்கொள்வார்கள். நான் முதலில் அதை ஏதோ காலம்காலமாக புழக்கத்தில் இருக்கும் ஒரு நம்பிக்கை என்றுதான் நினைத்தேன். ஆனால் அதில் உள்ள ஒவ்வொரு எழுத்தும் ஆணித்தரமான உண்மை என்பதை பெங்களூருக்கு வந்த ஒருசில ஆண்டுகளிலேயே புரிந்துகொண்டேன்.
மாயூரத்துக்கு அருகில் உள்ள கிராமம் ஆனந்தத்தாண்டவபுரம். அங்கே உள்ள அக்ரகாரத்தில் அண்ணுவையர் என்றொரு பண்ணையார் வாழ்ந்துவந்தார். அறநெறி சார்ந்த சிந்தனையும் இசையின் மீது நாட்டமும் உள்ளவர். அவருக்குச் சொந்தமாக ஏராளமான நிலபுலன்கள் இருந்தன. வீடு தேடி வரும் ஏழைகளுக்கு இல்லையென்று சொல்லாமல் அன்னதானம் செய்யும் பழக்கம் கொண்டவராகவும் அவர் வாழ்ந்து வந்தார்.