அறுபதுகளில் எங்கள் வீட்டில் ஒரு ரேடியோ இருந்தது. கூரைமீது ஒரு நீளமான குச்சியை நிற்கவைத்து, அதன் நுனியிலிருந்து ஏரியல் கம்பியை இழுத்துவந்து ரேடியோவுடன் இணைப்பு கொடுக்கப்பட்டிருக்கும். “இந்தக் கம்பி வழியாத்தான்டா வானம் வழியா ஒலிபரப்பாகிற பாட்டும் நாடகமும் ரேடியோவுக்கு வந்து சேருது” என்று சொன்னார் எங்கள் அப்பா. மேல்விளக்கத்துக்காக நான் எங்கள் பள்ளிக்கூட ஆசிரியர் ராமசாமி சாரிடம் போய் நின்றேன். அவர் வானொலி இயங்கும் விதத்தை படம் போட்டு விளக்கினார். இறுதியாக “ஒவ்வொரு நொடிக்கும் கோடிக்கணக்கான குரல்கள் அலையலையா இந்த வானம் வழியா போயிட்டே இருக்குது” என்று சொன்னார்.
Thursday, 28 May 2020
ஆயிரம் படிக்கட்டுகள் - கட்டுரை
1997 ஆம் ஆண்டில் கோபி
ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்தார். அவர் ஒருமுறை தம்மிடம் பயிலும் மாணவமாணவிகளை பெங்களூருக்கு அருகில் உள்ள நந்திமலை என்னும் சுற்றுலாத்தலத்துக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பேச்சுத்துணைக்கு நானும் அவரோடு சேர்ந்துகொண்டேன். பெங்களூரிலிருந்து நந்திமலை வரைக்கும் அரசுப்பேருந்தில் பயணம். பிறகு மலையேற்றம். மலையுச்சியில் சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் மீண்டும் இறங்கிவந்து பேருந்துபிடித்து ஊருக்குத் திரும்பிவிடலாம் என்பதுதான் திட்டம்.
Thursday, 21 May 2020
கூடு - சிறுகதை
மெழுகுவர்த்தி
நிறத்தில் பனிப்புகை அடர்ந்திருந்தது. ஜன்னல் திரைச்சீலைக்கு அப்பால் எதுவுமே
தெரியவில்லை. தோட்டத்தில் நந்தியாவட்டையின் பச்சைக்கிளைகள் கோணல் மாணலாக
இழுக்கப்பட்ட கோடுபோல மங்கலாகத் தெரிந்தன. இறகுப்பந்தாட்ட வலைக்கம்பம் அசைவே
இல்லாத ஒரு கொடிபோல காணப்பட்டது. குரோட்டன் செடித் தொட்டிகள் உறைந்து நின்றன. ‘பெரியப்பா பெரியப்பா’ என இரவெல்லாம் அரற்றிவிட்டு அதிகாலையில்தான்
உறங்கத் தொடங்கிய மஞ்சுக்குட்டியின் தலையை தொடையிலிருந்து மெதுவாக இறக்கி
தலையணையின்மீது வைத்தான் ராகவன். கடுமையான தலைவலியின் காரணமாக நெற்றியில்
இறுக்கமாகக் கட்டப்பட்ட துணியுடன் இரண்டு தலையணைகளை அடுக்கி உயரமாக்கி அதன்மீது
தலைவைத்து சுருண்டு படுத்திருக்கும் ரேவதியின் இடுப்புக்குக் கீழே அகப்பட்டுக்
கொண்ட லுங்கியின் முனையை சத்தம் காட்டாமல் மெதுவாக உருவியெடுத்துக் கொண்டு
கட்டிலிலிருந்து இறங்கினான். ஒருகணம் கைகளை உயர்த்தி உதறினான்.
Labels:
கூடு,
தமிழ்ச்சிறுகதை,
பாவண்ணன்,
வார்த்தை
ஆனந்த நிலையம் - சிறுகதை
”நீங்க ஊடு வாங்கற எடம் ரொம்ப ராசியான எடம் சார். ஜெயநகர்தான் பாண்டிச்சேரிலயே பெஸ்ட் ப்ளேஸ்” என்று
நான் சொன்னேன். பூவரச மரங்களின் நிழல் விரிந்திருந்ததால்
நின்று பேச வசதியாக இருந்தது. பத்திரப்பதிவு செய்ய
வந்தவர்களுடைய நான்கு சக்கர வாகனங்களும் இரண்டு சக்கர வாகனங்களும் பல இடங்களில்
நின்றிருந்தன. நான் சொல்வதை காதுகொடுத்துக் கேட்பது போலவும்
கேட்காததுபோலவுமான ஒரு பார்வையோடு தாமோதரன் நின்றிருந்தார். பக்கத்தில்
அவர் மனைவியும் மகனும் நின்றிருந்தார்கள்.
”இந்த பக்கம் நடந்து போனா ரிலைன்ஸ். மோரு.
அந்தப் பக்கம் போனா போத்தீஸ். உழவர் சந்தை.
எதுக்கும் நீங்க சிட்டிக்கு போவற வேலயே கெடையாது. இப்பிடி ஒரு எடம் எங்கயும் அமயாது பாத்துக்குங்க. நல்ல
யோகக்காரர்தான் நீங்க”
Labels:
ஆனந்த நிலையம்,
சொல்வனம்,
தமிழ்ச்சிறுகதை
Friday, 15 May 2020
நாடு, இலட்சியவாதம், மாற்றம் - கட்டுரை
பள்ளிப்பருவத்தில் மனப்பாடச்செய்யுளாக இருந்த
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் புறநானூற்றுப்பாடலை எனக்கு மிகவும் பிடிக்கும். எதிலும் பற்று கொள்ளாத, ஆசை வைக்காத, அதனாலேயே எந்தத் துன்பத்திலும் அகப்பட்டுக்கொள்ளாத, அனைத்தையும்
ஏற்றுக்கொள்கிற
ஒரு வாழ்க்கையை அது முன்வைப்பதாக எங்கள் ஆசிரியர் அதற்குப் பொருள் சொன்னார். அவருடைய பேச்சுத்திறமையின் காரணமாக ‘நீர்வழிப் படூஉம் புணைபோல’ என்னும் உவமை அன்றே மனத்தில் ஆழமாகப் பதிந்துவிட்டது. ஆற்றின் போக்கில் அசைந்துபோகும் தெப்பத்தைப்போல இயற்கையின் வழியில் வாழ்க்கை மனிதகுலத்தை அழைத்துச் செல்கிறது என அன்று அவர் வழங்கிய தத்துவ விளக்கத்தைக் கேட்டு மயங்கிவிட்டேன். பிறகு காலப்போக்கில் அந்த உவமையை நானே பல இடங்களில் அவரைப்போலவே எடுத்துரைக்கத் தொடங்கினேன்.
தேசியமும் ஊடகங்களும் - கட்டுரை
இந்தியாவில் பொழுதுபோக்கு ஊடகமாக மேடை நாடகங்கள் இருந்தவரைக்கும்
கவலைப்படாத ஆங்கில அரசு, மேடை நாடகங்களில் சுதந்திரப்போராட்டம் சார்ந்த
தகவல்கள் நேரிடயாகவும் உருவகமாகவும் பாடல்கள் வழியாகவும் இடம்பெறத் தொடங்கியதும் எச்சரிக்கை
அடைந்தது. தணிக்கைச்சட்டத்தின் உதவியோடு மேடையேற்றத்துக்கு பலவிதமான
இடையூறுகளை விளைவித்தது. ஒவ்வொரு ஊருக்கும் அனுமதி பெறவேண்டும், ஒவ்வொரு காட்சிக்கும் அனுமதி பெறவேண்டும் என விதவிதமான தொல்லைகள். இறுதியில் நாடகத்துக்கே தடை விதித்தது.
மேடைக்கலைஞர்கள்
பலரும் ஏதோ ஒரு விதத்தில் சுதந்திரப் போராட்டச் சார்புடையவர்களாகவே இருந்தனர். அதனால் தடையை மீறத் தயங்காதவர்களாகவும் அவர்கள் இருந்தார்கள். தடையுத்தரவை மீறி அயல்நாட்டுத் துணி புறக்கணிப்புப் பாடல்களை மேடையில் பாடியதற்காக எம்.வி.கமலம், சி.டி.ருக்மணிபாய் போன்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sunday, 10 May 2020
வத்திகுச்சி கோபுரம் - சிறுகதை
”அதோ பாருடா, அங்க ஒரு நந்தியாவட்டை மரம். பச்சை பெய்ண்ட் அடிச்ச வீடு. கல்யாணராமன் சார் சொன்ன அடையாளம். அதுவாதான் இருக்கும்.” என்று சுட்டிக்காட்டினான் அண்ணாமலை. நானும் இளங்கோவும் ஒரே நேரத்தில் அந்தப் பக்கம் பார்த்தோம். பேருந்து நிலையத்திலிருந்து பத்தே நிமிடத்தில் நடந்துவந்துவிட்டோம். அதைக்கூட கல்யாணராமன் போனிலேயே சொல்லியிருந்தார். “ஆட்டோவெல்லாம் வேணாம் தம்பி. புது ஆளுன்னு தெரிஞ்சிட்டா அம்பது குடு நூறு குடுன்னு கேப்பாங்க.
ஸ்டேன்ட்லேருந்து
வில்லினூரு பக்கமா ஒரே ரோடு. மூனாவது லெஃப்ட், ரெண்டாவது ரைட். நடக்கற தூரம்தான்” அவர் சொற்கள் ஒவ்வொன்றும் இன்னும் காதில் ஒலிப்பதுபோல இருந்தது.
Labels:
பதாகை,
பாவண்ணன்,
வத்திக்குச்சி கோபுரம்
திரை - சிறுகதை
சூரியன் மறைந்து சரியத் தொடங்கிய வேளையில் காலணிகள் அழுத்தமாகப் பதிந்து
நெருங்கி வரும் ஓசை கேட்டது. தலையைத் திருப்பி ஓசை வந்த திசையில் பார்க்க
முயன்றான் துரியோதனன். பிடறி நரம்புகள் முறுக்கிக் கொண்டதில் வலி தாளாமல் உதட்டைக்
கடித்தான். அதற்குள் நெருங்கி வந்துவிட்ட அஸ்வத்தாமன் அவன் தோள்களைப் பற்றினான்.
வலியில் சரிந்த துரியோதனனின் கண்களைச் சில கணங்களுக்கு மேல் பார்க்க இயலாமல்
பதற்றத்துடன் “துரியோதனா”
என்றபடி தரையில்
உட்கார்ந்தான். புன்னகையுடன் “நீ
பிழைத்திருக்கிறாயா அஸ்வத்தாமா?” என்று கேட்டான்
துரியோதனன்.
Labels:
இந்தியா டுடே,
துரியோதனன்,
பாவண்ணன்
Subscribe to:
Posts (Atom)