Home

Showing posts with label கன்னட நாட்டுப்புறக்கதைகள். Show all posts
Showing posts with label கன்னட நாட்டுப்புறக்கதைகள். Show all posts

Sunday, 26 October 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - புத்திசாலி மருமகள் -2

( தொடர்ச்சி....)

மாமியார் அரைமனத்தோடு மருமகள் சொன்ன செய்தியை மணியக்காரருக்குச் சொல்லி அனுப்பினாள். மணியக்காரரும் அப்போதே சம்மதம் தெரிவித்துவிட்டார். கோவில் ஆள் மாமியாரின் வீட்டுக்கு வந்து செய்தியைத் தெரிவித்துவிட்டுச் சென்றான்.

Sunday, 27 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 3

 

ராஜநாகத்தின் தலைவலியும் இளவரசியின் புன்னகையும்

 ஒரு காலத்தில் பத்து பதினைந்து கிராமங்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தை ஒரு ராஜா ஆண்டுவந்தார். எல்லாக் கிராமங்களிலும் பெருமளவில் விவசாயிகள் வாழ்ந்துவந்தனர். உரிய காலத்தில் மழை பொழிந்து, உரிய காலத்தில் வெயிலும் இருந்ததால், அந்தப் பிரதேசத்தில் விவசாயம் செழிப்பாக வளர்ந்திருந்தது. செல்வ வளர்ச்சி இருந்ததால், அரண்மனையில் வசித்துவந்த ராஜாவும் மகிழ்ச்சியாக இருந்தார்.

Sunday, 20 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 2

 

முக்கியமான முடிவு

 

ஒரு கிராமத்தில் மூன்று சகோதரர்கள் வசித்துவந்தார்கள். அவர்களுக்கு ஒரே ஒரு தங்கை இருந்தாள். குடும்பமே அவள் மீது பாசத்தைப் பொழிந்து வளர்த்து ஆளாக்கியது. அவளுக்குத் திருமணம் செய்துவைக்க வேண்டிய நேரம் வந்ததும், அனைவரும் இணைந்து பொருத்தமான மாப்பிள்ளையைத் தேடி அவளுக்குத் திருமணம் செய்துவைத்தனர். மாப்பிள்ளையின் ஊர் தம் கிராமத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தபோதும், அவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. நல்ல குணமுள்ளவனாகவும் வசதி உள்ளவனாகவும் இருக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய விருப்பமாக இருந்தது.  

Sunday, 13 April 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக் கதைகள் - 1

 

ஹுச்சையா

 

ஒரு நகரத்தில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அவர்களின் இளையவனை ஊரில் இருப்பவர்கள் அனைவருமே முட்டாள் என்னும் பொருளில் ”ஹுச்சையா ஹுச்சையா” என்றே அழைத்துவந்தனர்.