Home

Showing posts with label புதுமைக்கோயில். Show all posts
Showing posts with label புதுமைக்கோயில். Show all posts

Sunday, 27 September 2026

முப்பத்தாறு ரத்தினங்கள் - 13

 

மனிதர்களும் தெய்வமும்

தமிழில் சிறுகதை இலக்கியம் உருவாகிவந்த தொடக்க காலத்தில் எழுதிய முன்னோடிப் படைப்பாளிகளில் ஒருவர் பி.எஸ்.ராமையா என்கிற வத்தலகுண்டு ராமையா. இளமையில் வறுமைச்சூழல் காரணமாக பள்ளியில் நான்காவது படிவம் வரை மட்டுமே படித்தார். படிப்பை நிறுத்திய பின்னர் ஏறத்தாழ பத்தாண்டு காலம் வெவ்வேறு ஊர்களில் துணிக்கடை விற்பனையாளராகவும் உணவுவிடுதிப் பணியாளராகவும் பணிபுரிந்தார்.