Home

Sunday, 1 June 2025

என்றென்றும் வாழும் இலட்சியவாதம்

  

சர்வோதயம் மலர்கிறது இதழின் ஆசிரியராகவும் மதுரை காந்தி நினைவகத்தின் செயலாளராகவும் நீண்ட காலம் பணியாற்றிய க.மு.நடராஜன் அண்ணாச்சி 24.05.2021 அன்று இயற்கையெய்தினார். நான்கு ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்பதை நம்பவே முடியவில்லை. இன்றும் நண்பர்களோடு உரையாடும் சமயத்தில் அவர் தொடர்பான சில செய்திகளும் அடிக்கடி இடம்பெற்று வருவதால், அவருடைய மறைவு மனத்தில் பதியவே இல்லை.  

Sunday, 25 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 7

 

எறும்பின் சாகசம்

 ஒரு ஊரில் ஒரு பெரிய ஏரி இருந்தது. அதனுடைய கரை உயர்ந்த மேடு போல காட்சியளித்தது. அந்தக் கரையை ஒட்டி ஏராளமான செடிகொடிகளும் புதர்களும் உயரமான மரங்களும் இருந்தன. ஒரு புதருக்கு அருகில் ஒரு சின்ன எறும்புப்புற்று இருந்தது. அந்தப் புற்றுக்குள் ஒரு அம்மா எறும்பும் ஒரு குட்டி எறும்பும் இருந்தன.

செயலின் இனிமை

  

மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமி 14.10.2005 அன்று மறைந்தார். அவரோடு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்ந்து குடும்பப் பொறுப்புகளைச் சுமந்திருந்த கமலா அம்மையார், அதற்குப் பிறகான நாட்களில் பிரிவின் வேதனையை ஆற்றும் பொருட்டு எழுதத் தொடங்கினார். சு.ரா.வோடு சேர்ந்த வாழ்ந்த காலத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளையும் தன் தாயாரைப் பற்றியும் தன் இளமைக்கால நினைவுகளைப்பற்றியும் கல்வி கற்ற அனுபவங்களைப்பற்றியும் நினைவுக்குறிப்புகளாக எழுதினார். அவை தொகுக்கப்பட்டு ஏற்கனவே இரு நூல்களாக (நெஞ்சில் ஒளிரும் சுடர், நான் தைலாம்பாள்) வெளிவந்தன. அவ்வரிசையில் ’சு.ரா.வுக்குப் பின்’ மூன்றாவது நூலாகும்.

Sunday, 18 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 6 (பகுதி -1)

 

புஷ்பா


ஒரு கிராமத்தில் ஒரு குடும்பம் ஏழ்மையான நிலையில் வசித்துவந்தது. நடுவயதைக் கடந்த ஒரு அம்மாதான் அக்குடும்பத்தின் தலைவி. அவளுக்கு இரண்டு மகள்கள் இருந்தார்கள். மூத்தவள் பெயர் புனிதா. இளையவள் பெயர் புஷ்பா.

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 6 (பகுதி -2)

 (தொடர்ச்சி....)

“இது ஒன்னும் வாங்கன பூ கிடையாது. எங்க வீட்டு தோட்டத்துல பூத்த பூ” என்று பெருமையாகச் சொன்னாள் புஷ்பா.

பூவே இல்லாத தோட்டத்தைப் பார்த்ததை அவன் மனத்துக்குள் நினைத்துக்கொண்டான். இந்தப் பெண் எதையோ மறைக்கிறாள் என்பதுமட்டும் அவனுக்குப் புரிந்துவிட்டது. மேன்மேலும் அவளைப் பொய் சொல்லவைக்க வேண்டாம் என நினைத்து அமைதியாக இருந்தான்.

மானுட வாழ்க்கையின் தடங்கள்

 

உலகமெங்கும் புனைவுகளுக்கு இணையாக எழுத்தாளர்கள் தம் அனுபவத்துளிகள் அடங்கிய கதைக்கட்டுரைகளை எழுதும் போக்கு சமீப காலத்தில் பெருகிவருகிறது. கிட்டத்தட்ட அது ஒரு தன்வரலாறுதான். ஆனால் காலவரிசைப்படி எழுதப்பட்ட அனுபவங்களின் தொகுப்பாக அது அமைவதில்லை. ஞாபகத்துக்கு வந்த வரிசையில் அந்த அனுபவக் கட்டுரைகளை எழுதிச் செல்கிறார்கள். கலைத்துப்போட்ட சீட்டுக்கட்டு போல அவை அமைந்துவிடுகின்றன. படித்துப் பட்டம் பெற்று வேலைக்குச் சேர்ந்த காலத்து அனுபவங்கள் முதலில் இடம்பெறுகின்றன. அதற்கு அடுத்த அத்தியாயத்திலேயே தொடக்கப்பள்ளி அனுபவம் இடம்பெறுகிறது. படைப்பூக்கம் கொண்ட மனநிலை வாழ்வின் எந்தத்  தருணத்தை முதலில் கண்டெடுக்கிறதோ, அந்தத் தருணம் படைப்பாக அமைகிறது.

Sunday, 11 May 2025

நான் கேட்ட கன்னட நாட்டுப்புறக்கதைகள் - 5 (பகுதி - 1)

 

குருவும் சீடனும்

ஓர் ஊரில் ஒரு குருவும் சீடனும் இருந்தார்கள். அவர்கள் இருவரும் நாடோடிகள் போல ஊரூராகத் திரிந்துகொண்டே இருந்தார்கள். ஒருநாள் இரவில் தங்கிய ஊரில் அடுத்தநாள் தங்கமாட்டார்கள். உடனே பக்கத்து ஊருக்குச் சென்றுவிடுவார்கள்.