1915ஆம் ஆண்டில் காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் சென்னைக்கு வந்து ‘இந்தியன் ரிவ்யு’ இதழில் ஆசிரியரான ஜி.நடேசன் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார்கள். ஒருநாள் மாலையில் அவ்விருவரையும் அட்வகேட் ஜெனரலாக இருந்த சீனிவாச ஐயங்கார் விருந்துக்கு அழைத்திருந்தார். லஸ்சர்ச் சாலையில் இருந்த அவருடைய ’அம்ஜத்பாக்’ வீட்டுத் தோட்டத்தில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறிப்பிட்ட நேரத்தில் இருவரும் அந்த வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள். காந்தியடிகள் ஒரு வெள்ளை வேட்டியும் ஜிப்பாவும் வடநாட்டவருக்குரிய தலைப்பாகையையும் அணிந்திருந்தார். கஸ்தூர்பா எளிமையான தூய வெள்ளைப்புடவையை குஜராத்தி பாணியில் உடுத்தியிருந்தார். எவ்விதமான ஒப்பனையும் ஆபரணமும் இல்லாமல் மிக எளிமையான தோற்றத்துடன் காணப்பட்டார் அவர். கையில் மட்டும் இரும்பினால் செய்யப்பட்ட காப்பு அணிந்திருந்தார். அவர் தோற்றம் ஒரு குஜராத்திக் குடியானவருடைய மனைவியைப்போல இருந்தது.
Monday, 30 December 2019
ஒரு சண்டைக் காட்சி - கவிதை
எங்கள் வண்டி வராத சாலையில்
ஏகப்பட்ட வாகனங்கள்
சத்தம் கேட்டுத் திரும்பினேன்
சண்டையைக் கண்டு அதிர்ந்தது மனம்
Labels:
ஒரு சண்டைக்காட்சி,
பாவண்ணன்
ஆளற்ற வெளியில் ஒரு குருடன் - கவிதை
பரிசுச் சீட்டுகளின் பெயர் சொல்லி
ஆளற்ற வெளியில் விற்கிறான் அக்குருடன்
அவன் குரலில் ஆவல் தொனிக்கிறது
காற்றில் படபடக்கும் தாள்களை
விரல் நுனிகளால் அழுத்தித் தடுக்கிறான்
காகம் - கட்டுரை
கனகனேரியின்
கரைகள் உயர்த்தப்பட்ட பிறகு தினசரி நடைப்பயிற்சிக்குப் பொருத்தமான இடமாகிவிட்டது. நான்கு
சுற்று நடந்த பிறகு மரத்தடியில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.
வேடிக்கை பார்ப்பது
மனத்தை எளிதாக்கும் ஒரு கலை. அசையும் மரக்கிளைகள். அசையாத மணல்மேடுகள். நிறங்களால் ஈர்க்கும் பூக்கள்.
உதிர்ந்து புரளும் சருகுகள். அஞ்சியஞ்சி காலடி
வைத்து இரையைக் கொத்தியெடுக்கும் காகங்கள். புல்தரையில் நடந்து
செல்லும் மைனாக்கள். விர்ரென்று பறந்து கடந்துபோகும் குருவிகள். ஒன்றைப் பார்க்கும்போது,
அதை நானாகவே எண்ணிக்கொள்வது ஒரு கற்பனை விளையாட்டு. அதைப்போல ஆனந்தத்தாலும் ஆறுதலாலும்
மனத்தை நிறைக்கும் கணங்கள் வேறில்லை. இந்த உலகத்தில்தான் எத்தனை
வாழ்க்கைகள். எத்தனை அனுபவங்கள்.
Tuesday, 24 December 2019
சத்தியத்தின் ஆட்சி - காந்திய ஆளுமைகளின் கதைகள் -முன்னுரை
ஏதோ ஒரு புத்தகத்தைப்பற்றி ஒருநாள் இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது தற்செயலாக இலங்கையைச் சேர்ந்த இராஜகோபால் என்பவர் எழுதிய தன்வரலாற்று நூல் கிடைத்தது. தன்வரலாற்று நூல்களை வாசிப்பதில் எப்போதும் பெருவிருப்பம் கொண்டவன் நான். நாடகம், திரைப்படம், அறிவியல், அரசியல் என எந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எழுதிய தன்வரலாற்று நூல்களை ஆர்வமுடன் படித்துவிடுவேன். அவர்கள் வாழ்வில் நடைபெற்ற நிகழ்ச்சிகளையும் அவர்கள் வழியாக மெளனமாகக் கடந்துபோகும் வரலாற்றையும் அறிந்துகொள்வதை, அவர்களுடைய அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவன் என்னும் முறையில் என்னுடைய கடமை என்றே நான் நினைக்கிறேன். நூற்றுக்கும் மேற்பட்ட பக்கங்களை உடைய அந்தப் புத்தகத்தை கணிப்பொறியிலேயே படிக்க நான் விரும்பவில்லை. என்னால் அப்படி படிக்கவும் முடியாது. அதனால் உடனே கடைக்குச் சென்று அந்தப் புத்தகத்தை அச்சுப்படியாக மாற்றி எடுத்துவந்து அன்று இரவே படித்துமுடித்தேன்.
Labels:
இலங்கை,
காந்தியடிகள்,
தியாகி இராஜகோபால்
Friday, 20 December 2019
ஆதரவு - கட்டுரை
சுவரொட்டிகளின் நகரம் - கவிதை
சுவரொட்டிகளின் நகரம்
..
சுவரொட்டிகளின் பின்னிருக்கிற மன நிலை
எப்பொழுதும் எனக்குப் புரிவதில்லை
வாழ்க அல்லது ஒழிக
சவால் அல்லது அறிவிப்பு
கோரிக்கை அல்லது நன்றி
வரவேற்றல் அல்லது வழியனுப்புதல்
எல்லாவற்றுக்குமே பஞ்சவர்ண சுவரொட்டிகள்
ஏன் ஆனது இப்படி?
Friday, 13 December 2019
குழந்தையைப் பின்தொடரும் காலம் - கவிதை
குழந்தையைப்
பின்தொடரும் காலம்
நிரம்பி வழியும் ஏரியை
ஆனந்தம் பொங்கப் பார்க்கிறான் என் மகன்
அவன் கால்கள் பரபரக்கின்றன
கரையில் நின்று பாதங்களை நனைக்க
ஆவலுடன் என்னையும் அழைக்கிறான்
அக்கா தங்கச்சிக் கல் - கட்டுரை
புகைப்படம் எடுக்கும் நண்பரொருவர் என்னைப் பார்க்க ஒருமுறை வந்தார். நகரக்காட்சிகளைப் படமெடுப்பதற்காக அவர்
புறப்பட்டபோது நானும் அவருடன் சென்றேன். கடைத்தெருக்கள், பூங்காக்கள், ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், ஏரிகள் என பல இடங்களுக்கு நான் அவரை அழைத்துச் சென்றேன். காலையிலிருந்து மாலை வரைக்கும் கண்ணில்
பட்ட காட்சிகளையெல்லாம் படமெடுத்தபடியே வந்தார். ஏறத்தாழ நானூறு படங்கள் இருக்கும். வீட்டுக்குத் திரும்பிய பிறகு அப்படங்களைக்
கணிப்பொறிக்கு மாற்றி அவற்றை வகைப்படுத்தத் தொடங்கினார். பிறகு எதை வைத்துக்கொள்ளலாம், எதை அழித்துவிடலாம் என்ற தேர்வு தொடங்கியது. இறுதியில் ஆறு படங்கள் மட்டுமே எஞ்சின. அன்று முழுக்க எடுத்த படங்களில் அவை
மட்டுமே மிகச்சிறந்த தரத்தில் உள்ளன என்றார். அவருடைய கறாரான சுயதணிக்கை வியப்பூட்டியது. அந்தத் தணிக்கையுணர்வின் காரணமாகவே
அவர் மிகச்சிறந்த கலைஞராக விளங்குகிறார் என்பதையும் புரிந்துகொள்ளமுடிந்தது.
Labels:
உங்கள் நூலகம்,
உருப்பளிங்கு,
கல்யாண்ஜி
Tuesday, 10 December 2019
செளந்திரம் அம்மாள் - சத்தியத்தின் ஆட்சி - கட்டுரை
1921ஆம் ஆண்டில் காந்தியடிகள் மதுரைக்கு வந்திருந்தார். அப்போது டி.வி.சுந்தரம் ஐயங்காரின் மனைவி இலட்சுமி அம்மையாரின் தலைமையில் இயங்கி வந்த ’இந்து மாதர் சபை’ இராட்டையில் நூல்நூற்கும் பணிகளிலும் கதர் பணிகளிலும் ஈடுபட்டு வந்தது. ஒருநாள் அந்த அமைப்பில் நடைபெற்ற பிரார்த்தனைக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக காந்தியடிகள் வந்திருந்தார். நிகழ்ச்சியின் இறுதியில் இலட்சுமி அம்மையாரின் பணிகளைப் பாராட்டிய காந்தியடிகள் “தேச சேவைக்காக உங்கள் குடும்பத்தின் சார்பில் என்ன செய்யப்போகிறீர்கள்?” என்று கேட்டார்.
மறுகணமே இலட்சுமி அம்மையார் “எனக்கு எட்டுக் குழந்தைகள். அவர்களில் என் மகளை தேசப்பணிக்காக வழங்குகிறேன்” என்று தயக்கமின்றி பதில் சொன்னார். அதைக் கேட்டு புன்னகையுடன் அவருக்கும் அவருடைய மகளுக்கும் ஆசிகளை வழங்கிவிட்டு புறப்பட்டுச் சென்றார் காந்தியடிகள். காந்தியடிகளின் ஆசிகளைப் பெற்ற அந்த இளம்பெண்ணின் பெயர் செளந்திரம். பிற்காலத்தில் அம்மா என அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர்.
Friday, 6 December 2019
நா.ம.ரா.சுப்பராமன் - உலகத்துக்கொரு புதுமைவழி - கட்டுரை
1921 ஆம் ஆண்டில் கதராடைகள் அணிவதையும் இராட்டையில் நூல் நூற்பதையும் வலியுறுத்தும் நோக்கத்துடன் காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தார். அவர் பொதுவாக குஜராத்திய முறையில் எளிய வேட்டியும் மேல்சட்டையும் அணிவதுதான் வழக்கம். மதுரையை நோக்கிப் பயணம் செய்த வழியில் இடுப்பில் ஒரு துண்டை
மட்டுமே கட்டிக்கொண்டும் அல்லது
ஒரு நீண்டதொரு கோவணத்துணியை மட்டும்
அணிந்துகொண்டும் வேலை செய்த ஏழைகளைக் கண்டதும் துயரத்தில் ஆழ்ந்தார். இரவு முழுதும் அதைப்பற்றிய சிந்தனையிலேயே மூழ்கியிருந்தவர் மறுநாள் காலையிலிருந்து மேலாடையைத் துறந்து இடையில் கட்டிய வேட்டியுடன் மட்டும் நடமாடத் தொடங்கினார். இந்நிகழ்ச்சி நடைபெற்ற நாள் 22.09.1921.
Labels:
நா.ம.ரா.சுப்பராமன்
வை.மு.கோதைநாயகி அம்மாள் - தேசியமும் சேவையும் - கட்டுரை
கேரளத்தில் வைக்கம் என்னும் நகரில் 1925ஆம் ஆண்டில் தீண்டாமைக்கு எதிராக ஒரு போராட்டம் நடந்துகொண்டிருந்தது. அந்நகரத்தில் இருக்கும் மகாதேவர் ஆலயத்துக்குச் செல்லும் எல்லா வழித்தடங்களிலும் எல்லா வகுப்பினரும் வேறுபாடின்றி நடந்துபோகும் உரிமைக்காக அப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதில் கலந்துகொள்வதற்காக திருவனந்தபுரத்தை நோக்கிப் புறப்பட்ட காந்தியடிகளும் கஸ்தூர்பாவும் சென்னையில் மூன்று நாட்கள் தங்கினார்கள். சீனிவாச ஐயங்கார் என்பவருடைய இல்லத்தில் அவர் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நகரத்தின் பல பகுதிகளிலிருந்து கூட்டம்கூட்டமாக மக்கள் அந்த வீட்டுக்கு வந்து காந்தியடிகளைப் பார்த்துவிட்டுச் சென்றார்கள்.
Labels:
கதர்,
சத்தியமூர்த்தி,
பாரதியார்,
வை.மு.கோதைநாயகி
Subscribe to:
Posts (Atom)