Home

Thursday, 30 April 2020

தாய்மையின் அழகு - கட்டுரை




குன்றோரமாக இருந்த விடுதியில் இரவைக் கழிக்க ஏற்பாடு செய்திருந்தார் நண்பர். பொழுது சாயும் நேரத்துக்குள் சேர்ந்துவிடவேண்டும் என்பதுதான் திட்டம். ஆனால் வழியில் வாகனத்தில் ஒரு சக்கரம் பழுதாகிவிட்டது. அதைச் சரிப்படுத்திக்கொண்டு கிளம்பும் சமயத்தில் மழை பிடித்துவிட்டது. வாகனத்தை மெதுவாகத்தான் நண்பரால் ஓட்டிவர முடிந்தது. விடுதியை அடையும்போது இரவு மணி ஒன்பது.

இனிய குரல் - கட்டுரை



என் இளமைப்பருவத்தில் தெருக்கூத்து பார்ப்பதிலும் பாட்டுக்கச்சேரி கேட்பதிலும் அதிக ஆர்வமிருந்தது. எங்கள் ஊரைச்சுற்றி எந்த இடத்தில் நடந்தாலும் முதல் ஆளாகப் போய் நின்றுவிடுவேன். என்னைப்போலவே ஆர்வமுள்ள குணசேகரும் என்னோடு சேர்ந்துகொள்வான். என் மனத்துக்கு இசைவான நண்பன் அவன்.

Thursday, 23 April 2020

ஏரிக்கரையும் பச்சைக்கிளியும் - கட்டுரை



1982இல்மானச சரோவர்என்னும் பெயரில் ஒரு கன்னடத் திரைப்படம் வெளிவந்தது. புட்டண்ணா கனகல் இயக்கிய படம். நாரிஹள்ள ஏரியைச் சுற்றி நடப்பதுபோல அதன் திரைக்கதையை அவர் அமைத்திருந்தார். அந்த ஏரியை அவர் காட்சிப்படுத்தியிருந்த விதம் அதை உடனே பார்க்கத் தூண்டியது. நானும் திவாகரும் அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். திரும்பி வரும்போது நான் அந்த ஏரியின் அழகைப்பற்றியே பேசிக்கொண்டு வந்தேன். அந்த ஏரியையும் கனகல் ஓர் அமைதியான பாத்திரம்போல கதைக்குள் கொண்டு வந்திருந்தார்.

ரயில் பயணம் - கட்டுரை




இருபதாண்டுகளுக்கு முன்பு குற்றாலத்தில் நண்பர் தர்மராஜனுடன் சில நாட்கள் தங்கியிருந்தபோது வண்ணநிலவன் எழுதியகுளத்துப்புழை ஆறுகவிதையைப்பற்றி ஒரு பேச்சு வந்தது. உடனே தர்மராஜன் உத்வேகம் கொண்டுவருகிறீர்களா, அந்த ஆற்றைப் பார்த்துவிட்டு வருவோம், இங்கிருந்து பக்கம்தான்என்று அழைத்தார்.

Friday, 17 April 2020

உயர்ந்த உள்ளம் - கட்டுரை




கடந்த பத்தாண்டுகளில் சொல்வனம், திண்ணை, பதாகை போன்ற இணைய இதழ்களில் அவ்வப்போது சிறுகதைகளை எழுதி வருபவர் ரா.கிரிதரன். மிகக்குறைவாவே அவர் எழுதி வந்தாலும் அவர் படைப்புகள் நம்பிக்கையூட்டும் விதமாக இருப்பதை உணர்ந்திருக்கிறேன்.  படைப்பாக்கம் சார்ந்து அவரிடம் வெளிப்படும் அக்கறையின் மீது எனக்கு எப்போதும் மதிப்புண்டு. குறிப்பாக ஏராளமான நுண்தகவல்களை, எந்த இடத்திலும் துருத்திக்கொண்டு தெரியாதபடி மிக கச்சிதமாகவும் பயன்படுத்தும் கலை அவரிடம் தென்படுவதை உணர்ந்தேன். பத்தாண்டு கால கனவின் வெளிப்பாடாகவும் உழைப்பின் விளைவாகவும் வெளிவந்திருக்கும் ரா.கிரிதரனின் முதல் தொகுதி காலத்தின் முடிவுக்காக ஒலித்த இசை.

நம்மால் என்ன செய்யமுடியும்? - கட்டுரை



காலைநடையின்போதே காற்றின் வேகம் கூடுதலாக இருப்பதுபோலத் தோன்றியது. ஆனால் அது மழையைக் கொண்டுவரும் வேகமா அல்லது வரவிருக்கும் மழையை நிறுத்தப்போகும் வேகமா என்பதுதான் புரியவில்லை. எதிரில் வந்த வாகனத்தால் எழுந்த புழுதிப்புகை கொடியிலிருந்து உருவிக்கொண்டோடும் ஆடையென வளைந்து வளைந்து போனது. சில கணங்களுக்கு கண்களைத் திறக்கவே முடியவில்லை. சிறிது நேரம் ஓரமாக ஒதுங்கி நின்றபிறகே நடையைத் தொடர்ந்தேன். காற்றின் தாண்டவத்தைக் கவனித்தபடி சூரியன் தன் போக்கில் நகர்ந்துகொண்டிருந்தது.

Saturday, 11 April 2020

சம்மதங்கள் எங்கிருந்து பிறக்கின்றன...? - சிறுகதை




ஆங்கில எழுத்துக்களின் வரிசையின்படிதான் எங்கள் நாலாவது வகுப்பு அட்டன்டன்ஸ் புத்தகத்தில் பெயரெழுதி இருந்தார்கள். அடர்த்தியான பச்சை வர்ணத்தில் பைண்டிங் செய்த அந்த அட்டென்டன்ஸ் புத்தகத்தை பார்ப்பதற்கே மிரட்சியாய் இருக்கும். வீட்டில் இருந்து பள்ளிக்கூடம் செல்கிற வழியில்கூட இந்த விஷயம் ஞாபகத்துக்கு வந்த கையோடு பயமும் சேர்ந்துவிடும். ஏற்கனவே அம்மாவும் ஆயாவும் சொன்ன கதைகளில் இருந்து எமனுக்கு அந்தரங்கக் காரியதரிசியான சித்ரகுப்தன் பற்றியும் அவன் சகல நேரங்களிலும் சுமந்த ஜனன மரணப் பதிவேடு பற்றியும் ஒரு உருவம் எனக்குள் திரண்டு உருவாகி இருந்தது. அந்த உருவத்தையும் அட்டன்டன்ஸ் புத்தகத்தையும் சம்பந்தப்படுத்திப் பார்த்துப்பார்த்து மனசுக்குள் ஒரு கலக்கத்தை உருவாக்கிக்கொண்டேன்.

எங்கள் ஊரில் சவண்டல்மரம் இல்லை - கட்டுரை




வீரமுத்துவின் கண்கள் எங்கோ மறைந்துநின்றபடி என்னை உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்கின்றன என்ற எண்ணத்தை ஒரு நம்பிக்கைபோல ஐம்பதாண்டு காலமாக என் மனத்தில் சுமந்துகொண்டிருக்கிறேன். ஏதோ ஒரு கணத்தில் சட்டென்று என் முன்னால் தோன்றி என் தோளைத் தொட்டு அவன் அழுத்துவான் என்னும் எதிர்பார்ப்பிலிருந்து என்னால் ஒரு கணம் கூட விடுபட முடிந்ததில்லை.

Sunday, 5 April 2020

பார்வை - சிறுகதை



ம் நிர்வாகப் பொறுப்பிலிருக்கும் இல்லத்தில் ஒரு மாதம் கழித்து நடக்கவிருக்கும் ஆண்டுவிழாவில் போட்டிகளுக்குப் பரிசு வழங்கி சிறப்புரையாற்றவேண்டுமென்று கேட்டுக்கொண்டார் செல்லப்பா. 

தெளிவு - சிறுகதை




உதடு குவித்து முகத்தைப் பறக்கவிட்ட மோகனின் உருவம் ஒரே கணத்தில் மறைந்துபோனது. வெறுமை படர்ந்த கணிப்பொறித் திரையை பெருமூச்சுடன் பார்த்தாள் ராதா. மெதுவாக சுவர்க்கடிகாரத்தை அண்ணாந்து நோக்கினாள். ஐந்து. ஜன்னல் வழியாக குளுமை படித்த காற்று வீசியது. அவன் பேசத் தொடங்கியபோது கடிகாரமுள் மூன்றில் இருந்தது. ஏறத்தாழ இரண்டுமணிநேரம் நீண்ட பேச்சு.