Home

Tuesday, 11 July 2023

பதிவுகள் - இணைய இதழ் நேர்காணல்

எழுத்தாளர் பாவண்ணனுடன் ஒரு நேர்காணல்: "கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கைஅந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்அதுவே என் எழுத்தின் வழி." - பாவண்ணன்

நேர்காணல் கண்டவர் எழுத்தாளரும், 'பதிவுகள்இணைய இதழ் ஆசிரியருமான ..கிரிதரன்

நாள் : 01 ஜூலை 2023


 

தமிழ் இலக்கியத்தில் எழுத்தாளர் பாவண்ணனின் பங்களிப்பு முக்கியமானது.  சிறுகதைகவிதைநாவல்இலக்கியத் திறனாய்வு மற்றும் மொழிபெயர்ப்பு என இவரது இலக்கியப் பங்களிப்பு பன்முகப்பட்டதுமொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது பெற்றவர்.  தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா)  2022 ஆம் ஆண்டுக்குரிய வாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது  பெற்றவர்விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது பெற்றவர்புதுச்சேரி அரசின்இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது பெற்றவர்இவை தவிர மேலும் பல இலக்கிய விருதுகளைச் சிறுகதைகட்டுரைகுழந்தை இலக்கியத்துக்காகப் பெற்றவர்பாவண்ணன் பதிவுகள் இணைய இதழுக்கு வழங்கிய நேர்காணல் இது.  -


வணக்கம் பாவண்ணன்முதலில் உங்களுக்கு இயல்விருது 2022 வாழ்நாள் இலக்கியச் சாதனைக்காகக் கிடைத்ததையிட்டு மகிழ்ச்சியும் , வாழ்த்துகளும்உங்களது இலக்கியச் செயற்பாடுகளை அனைவரும் அறிந்திருக்கின்றோம்பதிவுகள் இணைய இதழிலும் உங்களது நெடுங்கதையான 'போர்க்களம்வெளியாகியுள்ளதை இத்தருணத்தில் நினைவு கூர்கின்றோம்முதலில் உங்கள் இளமைக்கால அனுபவங்களைபிறந்த ஊர் போன்ற விபரங்களை அறிய ஆவலாகவுள்ளோம்அவை பற்றிய உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியுமா?

வணக்கம்உங்கள் வாழ்த்து மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறதுமிக்க நன்றிபதிவுகள் இணைய இதழில் எழுதிய பழைய நினைவுகளும் உங்களோடு பகிர்ந்துகொண்ட மின்னஞ்சல்களின் நினைவுகளும் பசுமையாக என் ஆழ்மனத்தில் பதிந்துள்ளனஅவற்றை ஒருபோதும் மறக்கமாட்டேன்தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த வளவனூர் என்னும் கிராமமே எனக்குச் சொந்த ஊர்விழுப்புரத்துக்கும் புதுச்சேரிக்கும் இடையில் இக்கிராமம் இருக்கிறதுதொடக்கப்பள்ளியிலிருந்து உயர்நிலைப்பள்ளிப்படிப்பு வரை வளவனூரிலேயே படித்தேன்பிறகு புகுமுக வகுப்பை விழுப்புரம் அரசு கல்லூரியிலும் பட்டப்படிப்பை புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியிலும் படித்தேன்என் ஆசிரியர்களே எனக்குச் சிறந்த வழிகாட்டிகளாக இருந்தார்கள்வளவனூர் மிக அழகான கிராமம்மொத்த ஊரே நாலு சதுரகிலோமீட்டருக்குள் அடங்கிவிடும்கிராமத்தைச் சுற்றியுள்ள பல சிற்றூர்களுக்கு பாசன வசதியைக் கொடுக்கும் அளவுக்கு பெரியதொரு ஏரி இருக்கிறதுதென்பெண்ணை ஆற்றோடு ஏரியை இணைக்கும் நீண்ட கால்வாயும் உண்டுகோடைக்காலத்தில் வறண்டிருந்தாலும் மழைக்காலத்தில் ஏரி நிரம்பி வழியும்அப்போது பலவிதமான பறவைகளை ஏரியைச் சுற்றியுள்ள மரங்களில் அமர்ந்திருக்கும் அழகைப் பார்க்கமுடியும்எங்கள் ஊர் ரயில்வே ஸ்டேஷன் விரிவான நிலப்பரப்பைக் கொண்ட இடம்ஒரு பெரிய தோப்புக்குள் கட்டப்பட்ட வீட்டைப்போல அக்காலத்தில் இருக்கும்ஆலமரங்கள்அரசமரங்கள்நாவல் மரங்கள்இலுப்பைமரங்கள்நுணா மரங்கள் என எல்லா வகை மரங்களும் நிறைந்திருக்கும்அந்த மரங்களின் நிழலில்தான் நானும் என் நண்பர்களும் இளமைக்காலத்தில் ஆட்டமாடிக் களித்தோம்திசைக்கொரு கோவில்அழகான கிளை நூலகம்கட்சி சார்ந்த வாசக சாலைகள் எல்லாமே வளவனூரில் இருந்தனஅந்தக் கிராமத்தில் நான் கழித்த இளமைக்காலப் பொழுதுகள் இன்னும் என் நினைவில் பசுமையாகப் பதிந்துள்ளனஇன்றும் தேவைப்படும்போதெல்லாம் அந்த அனுபவங்களின் சுரங்கத்திலிருந்து ஒரு சிலவற்றை என் படைப்புகளில் பயன்படுத்திக்கொள்கிறேன்.

உங்களது ஆரம்ப காலத்து வாசிப்பு அனுபவம் எத்தகையதாகவிருந்ததுபொதுவாகப் பலரும் அம்புலிமாமாவெகுசன இதழ்களூடு வெகுசனப்புனைகதைகள் என்றுதான் வாசிப்புக்குள் அடியெடுத்து வைத்திருப்போம்சிலர் விதிவிலக்குகளாக இருக்கக்கூடும்உங்கள் அனுபவம் எவ்வகையானதுஆரம்பத்தில் உங்களை ஈர்த்த படைப்புகள் எவையெவைஎழுத்தாளர்கள் யார் யார்?

நான் பள்ளியில் படித்த காலத்தில் வாரத்துக்கு ஒருமுறை நூலக வகுப்பு என்றொரு பாடவேளை இருந்ததுஅப்போது எங்கள் ஆசிரியர் பள்ளி நூலகத்திலிருந்து சிறுவர்களுக்கான கதைப்புத்தகங்களை வரவழைத்து ஆளுக்கொரு புத்தகத்தைக் கொடுத்து படிக்கவைப்பார்அரைமணி நேரம் வாசிப்புபிறகு சிறிது நேரம் அதைப்பற்றி உரையாடல்அவரே பல நேரங்களில் கதைகளும் பாட்டுகளும் சொல்லிக் கொடுப்பார்மேலும் மேலும் புத்தகங்களைப் படிக்கும் விருப்பத்தைத் தெரிவித்தபோது அவரே நூலகரிடம் சொல்லிஎனக்குப் புத்தகம் கொடுக்க ஏற்பாடு செய்தார்ஆனால் அவற்றை வீட்டுக்கு எடுத்துச் சென்று படிக்கமுடியாதுஅவர் வழிகாட்டியபடி ஊரில் இருந்த கிளைநூலகத்துக்குச் சென்றேன்அங்கே பாண்டியன் என்றொரு அண்ணன் இருந்தார்அவர் அம்புலிமாமா இதழ்களைக் கொடுத்து படிக்கச் சொன்னார்பழைய அம்புலிமாமா இதழ்களின் தொகுதிகள் பைண்டு செய்யப்பட்டு நூலகத்தில் இருந்தனஅவற்றையெல்லாம் படித்தேன்என் ஆர்வத்தைப் புரிந்துகொண்ட ஆசிரியர் அவரிடமிருந்த பழைய கண்ணன்டமாரம்பாப்பா மலர் இதழ்த்தொகுதிகளைக் கொடுத்தார்நூலகர் அண்ணனும் தனிப்பட்ட சிறுவர் கதை நூல்களை எடுத்துப் படிப்பதற்கு அனுமதித்தார்என் வாசிப்பு வேகத்தைப் பார்த்த பிறகுஎன் போக்கில் சுதந்திரமாக நூல்களை எடுத்துப் படிக்க அனுமதித்துவிட்டார்உயர்நிலைப்பள்ளிக்குச் சென்ற பிறகு ஆனந்தவிகடன்குமுதம்தினமணிக்கதிர் இதழ்களையெல்லாம் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன்அவற்றில் வெளிவரும் சிறுகதைகளையும் தொடர்கதைகளையும் படித்தேன்கல்கியின் பொன்னியின் செல்வன்சிவகாமியின் சபதம்தமிழ்வாணனின் துப்பறியும் நாவல்கள்தேவனின் நகைச்சுவைக்கதைகள்சுஜாதாவின் சிறுகதைகள் என கைக்குக் கிடைத்ததையெல்லாம் ஆர்வத்துடன் படித்தேன்ஒருநாள் எங்கள் வீட்டுக்குப் பக்கத்துவீட்டிலிருந்த அக்கா ஒருவருக்குத் திருமணம் முடிவானதுஅவரும் நல்ல வாசகர்ஏராளமான புத்தகங்கள் வைத்திருந்தார்எல்லாவற்றையும் மூட்டையாகக் கட்டி கடையில் போட்டுவிட்டு வருமாறு என்னிடம் கொடுத்தார்நான் அவருடைய அனுமதியோடு எல்லாவற்றையும் வீட்டுக்கு எடுத்துச் சென்றேன்அந்தப் புத்தகக்கட்டில் கு.அழகிரிசாமியின் சிறுகதைத்தொகுதி இருந்ததுநான் அதுவரை படித்த கதைகளிலிருந்து அவர் கதைகள் வேறுபட்டிருந்தனஎனக்குள் ஒரு புதிய உலகத்தின் வாசல் திறந்ததுபோல இருந்ததுஅழகிரிசாமியின் வழியிலேயே சென்று ஜெயகாந்தனையும் புதுமைப்பித்தனையும் சுந்தர ராமசாமியையும் படித்தேன்என்னை அறியாமலேயே பொதுவாசிப்பிலிருந்து இலக்கிய வாசிப்புக்குள் வந்து சேர்ந்துவிட்டேன்.

ஒருவரின் வாசிப்பனுபவத்தில் வெகுசனப் படைப்புகளுக்கும் முக்கியமானதோர் பங்குண்டுஅவை வாசிப்பனுபவத்தில் படிக்கட்டுகள்இது பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

ஒரு சமூகத்தில் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் எப்போதும் ஒரு குறிப்பிடத்தக்க பங்கு உண்டுஅந்தப் படைப்புகள் வழியாகத்தான் ஒரு வாசகருக்கு பொது மொழிக்கு அப்பால் புழங்கும் கதைமொழி அறிமுகமாகிறதுஒரு கதையுலகம் அறிமுகமாகிறதுகண்ணால் பார்க்கமுடியாத மனிதர்களின் கதைகள் அறிமுகமாகின்றனபத்திரிகைகளையோபொதுவாசிப்புக்குரிய படைப்புகளையோ படிக்காத ஒருவர் எப்படி இருப்பார் என்று யோசித்துப் பாருங்கள்அவர் தம்மோடு பழகக்கூடிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தம் தெருவில் வசிப்பவர்களுக்கும் அப்பால் ஒருவரையும் அறியாதவராகவே இருப்பார்எந்த அனுபவமும் அவரை வந்தடைய வாய்ப்பிருக்காதுபொதுவாசிப்புதான் முகம் தெரியாத மனிதர்களின் கதைகளை ஒருவருக்கு அறிமுகப்படுத்துகிறதுதாம் வாழாத பிறருடைய வாழ்க்கைவகைகளை அறிமுகப்படுத்துகிறதுஅது கற்பனையாகவே இருந்தாலும் ஒருவருடைய வாழ்வில் ‘பிறர்’ என்பவருக்கு அப்போதுதான் ஓர் இடம் உருவாகிறதுபொழுதுபோக்காகவே நாம் ஏராளமானவர்களைப்பற்றித் தெரிந்துகொள்கிறோம்அது ஒரு தொடக்கம்இலக்கிய வாசிப்பு அந்த உலகத்தை இன்னும் பட்டை தீட்டிக்கொள்ளவும் கூர்மைப்படுத்திக்கொள்ளவும் துணை புரிகிறதுஅந்த அனுபவத்தின் பின்னணியில் வாழ்க்கையை மதிப்பிடும் கலை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாக வசப்படுகிறது.

 

உங்கள் வாசிப்பவனுபவத்தில் அடுத்த படிக்கட்டுகளில் உங்களைக் கவர்ந்த இலக்கியப்படைப்புகள் எவைஅவை உங்களைக்கவர்வதற்குக் காரணங்கள் என்னென்ன?

நான் ஏற்கனவே சொன்னதுபோல கு.அழகிரிசாமியின் எழுத்துகளே புதிய உலகத்தை நோக்கிச் செல்ல எனக்குத் துணைபுரிந்தனஅதைத் தொடர்ந்து ஜெயகாந்தன் கதைகளைப் படித்தேன்அவை மேலும் என்னை ஆழத்தை நோக்கிச் செலுத்தினஅவர்களைத் தொடர்ந்து சுந்தர ராமசாமி.நா.சுப்பிரமணியன்புதுமைப்பித்தன்.பிச்சமூர்த்திமெளனிஅசோகமித்திரன்தி.ஜானகிராமன்ஜி.நாகராஜன்கி.ராஜநாராயணன்எம்.வி.வெங்கட்ராம் அனைவரையும் தேடித்தேடிப் படித்தேன்.நா.சு.வின் படித்திருக்கிறீர்களா என்னும் புத்தகத்தை ஒருமுறை நூலகத்தில் கண்டெடுத்துப் படித்தேன்அவர் காலகட்டத்தில் மிக முக்கியமானவை என அவர் கருதிய புத்தகங்களை அறிமுகப்படுத்தும் விதமாக அவர் எழுதிய கட்டுரைகளின் தொகுதி அதுஒரு பெரிய வழிகாட்டி நூல்பல துறைகள் சார்ந்தவை அந்நூல்கள்ஆனால் முக்கியமானவைஅவர் சுட்டிக்காட்டி உடனடியாக படித்த நாவல் நாகம்மாள்கடைசியாகப் படித்தது சங்கீதயோகம்ஒவ்வொரு புத்தகத்தையும் தேடித்தேடிப் படித்தேன்அந்தக் காலத்தில் புத்தகம் கிடைப்பது அவ்வளவு கஷ்டமாக இருந்ததுநூலகங்களைத் தவிர வேறெங்கும் கிடைக்காதுஅப்பட்டியலில் இருந்த புத்தகங்களைப் படிப்பதற்கு எனக்கு பத்து ஆண்டுகள் தேவைப்பட்டனஅன்றும் இன்றும் எனக்குப் பிடித்தமான நாவலென .நா.சு.வின் பொய்த்தேவு நாவலைச் சொல்வேன்அதைப் படிக்கும்தோறும் புதுப்புது எண்ணங்கள் எழுகின்றனசிங்காரத்தின் புயலிலே ஒரு தோணிதி.ஜானகிராமனின் மோகமுள்,  அசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்ஜி.நாகராஜனின் நாளை மற்றுமொரு நாளேஜெயகாந்தனின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்கி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்சா.கந்தசாமியின் சாயாவனம்விட்டல்ராவின் போக்கிடம்நதிமூலம்பூமணியின் பிறகுவெங்கடேசனின் காவல்கோட்டம்ஜோடிகுரூஸின் ஆழிசூழ் உலகுஜெயமோகனின் கொற்றவைஏழாம் உலகம் ஆகியவை என் மனத்துக்கு நெருக்கமான நாவல்கள்அவை ஒவ்வொன்றும் ஏன் பிடித்திருந்தது என்று சொல்லலாம்ஆனாலும் அது ஏதோ பேருரை ஆற்றுவதைப்போல ஆகிவிடும்சுருக்கமாகமானுட வாழ்வின் வெவ்வேறு தளங்களை பின்னணியாகக் கொண்டு மனம் இயங்கும் வெவ்வேறு வழிமுறைகளை அந்தப் படைப்புகள் எனக்கு உணர்த்தின என்று சொல்லலாம்.

சமகாலத்தமிழ் இலக்கியம் உங்களுக்கு நம்பிக்கையினைத் தருகின்றதாஉங்களைக் கவர்ந்த சமகால இலக்கியப் படைப்புகள்ஆளுமைகள் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?

சமகால இலக்கியம் எனக்கு மிகுந்த நம்பிக்கையை அளிக்கிறதுபுத்தாயிரத்தாண்டுக்குப் பிறகு தமிழுக்கு வளம் சேர்க்கும் படைப்புகள் ஏராளமாக வெளிவந்துள்ளனபுதுப்புது பின்னணியில் நாவல்களை எழுதிப் பார்க்கும் ஆற்றல் நிறைந்தவர்களாக புதிய எழுத்தாளர்கள் வளர்ந்து நிற்கிறார்கள்பல எழுத்தாளர்களின் முதல் படைப்பே நாவலாகத்தான் இருக்கிறதுஉடனடியாக நினைவுக்கு வரும் சில படைப்புகளை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்கலைச்செல்வி எழுதிய ஆலகாலம்ஹரிலால்தேய்புரி பழங்கயிறுமுத்துநாகு எழுதிய சுளுந்தீசயந்தன் எழுதிய ஆறாவடுஎஸ்.செந்தில்குமார் எழுதிய கழுதைப்பாதைஅமலன் ஸ்டான்லி எழுதிய வெறும் தானாய் நின்ற தற்பரம்ஒளவிய நெஞ்சம்எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சிகீரனூர் ஜாகிர்ராஜாவின் இத்தாஅஜிதனின் மைத்ரிதூயனின் டார்வினின் வால்சிறுகதைகளைப் பொறுத்தவரையில் திருச்செந்தாழைசுஷில்குமார்செந்தில் ஜெகன்னாதன்மயிலன் ஜி.சின்னப்பன்கனகலதா.கிருத்திகாகமலதேவிராம் தங்கம்சுனில்கிருஷ்ணன்சரவணன் சந்திரன்அசோக்குமார் ஆகிய பெயர்கள் உடனடியாக நினைவுக்கு வருகின்றனஇன்று தமிழில் வெளிவரும் எந்த இணைய இதழைத் திறந்தாலும்இவர்களில் யாரேனும் ஒருவருடைய சிறுகதை இடம்பெற்றிருப்பதைப் பார்க்கலாம்இன்றைய காலகட்டத்தை இணைய இதழ்களின் காலம் என்று சொல்லலாம்இன்று நம்பிக்கையூட்டும் இவ்விளைஞர்கள் இதே வலிமையுடன் தொடர்ந்து படைப்புகளை அளித்தால்எதிர்காலத்தில் மிகச்சிறந்த ஆளுமைகளாக உயர்ந்தெழக்கூடும்.

நீங்கள் எதற்காக எழுதுகின்றீர்கள்எழுத்து பற்றியதொரு நோக்கமுள்ளதாமக்களுக்காக எழுதுகின்றீர்களாஉள்ளத்திருப்திக்காக எழுதுகின்றீர்களாஎழுத்துமொரு கலைகலை இன்பத்தைத் தருமொன்றுஅதற்காக அவ்வின்பத்துக்காக எழுதுகின்றீர்களா?

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தைத் தொடங்கும்போதே பாயிரத்தில் தம் படைப்பின் நோக்கங்களை முன்வைத்துவிடுவதைப் பார்க்கலாம்ஆனால் இன்றைய இணையகால இலக்கிய உலகில் படைப்புகளின் ஓட்டத்தில் அல்லது வாசிப்பு அனுபவத்தில் அது வெளிப்படும்வகையில் எழுதப்படுகிறதுஓர் எழுத்தாளரின் படைப்புலகத்தை வாசித்து உள்வாங்கிக்கொள்ளும் ஒரு வாசகனுக்குஅந்த எழுத்தாளரின் மனத்தை எளிதாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறதுஆனாலும் சிற்சில சமயங்களில் ஒரு கேள்வியாக அது வெளிப்படும்போதுஅதற்கு நேரிடையாகவே பதில் சொல்லவேண்டியதாக இருக்கிறதுதொடக்கத்தில் என் சொந்த வாழ்க்கை அனுபவங்களை முன்வைப்பதாகவே என் எழுத்துலகம் அமைந்திருந்ததுகொஞ்சம்கொஞ்சமாக பிறருடைய அனுபவங்களையும் என்னுடைய அனுபவங்களாக கட்டமைத்துக்கொண்டேன். அந்த அனுபவத்தொகையில் என்னை அறியாமலேயே ஒரு தேர்வு நிகழ்ந்திருப்பதை பிற்காலத்தில் உணர்ந்தேன்என் வாழ்க்கைப்பார்வைக்கும் அத்தேர்வுக்கும் நெருக்கமானதொரு தொடர்பு இருப்பதையும் உணர்ந்தேன்கருணையும் மனிதாபிமானமும் வாழ்க்கையின் ஆதாரத்தளங்கள் என்பது என் அழுத்தமான நம்பிக்கைஅந்த நம்பிக்கையையே வெவ்வேறு பின்னணியில் வெவ்வேறு மனிதர்கள் வழியாக வெளிப்படுத்தி வந்திருக்கிறேன்அதுவே என் எழுத்தின் வழிகருணையும் மனிதாபிமானமும் நிறைந்த கணங்களை இவ்வாழ்வில் தேடித்தேடி முன்வைத்தபடி இருக்கிறேன்.

நீங்கள் புனைவுஅபுனைபுகவிதைமொழிபெயர்ப்புகுழந்தை இலக்கியம் என்று பன்முகப்பங்களிப்பு செய்து வரும் படைப்பாளிஉங்கள் படைப்புகள் பற்றிய உங்கள் மனநிலை இன்று எவ்வாறுள்ளதுஅவற்றையிட்டு மிகுந்த திருப்தியுண்டா?

நூறு கதைகளை எழுதிவிட்ட அனுபவத்தில்நூற்றியோராவது கதையை எளிதாகத் தொடங்கிவிடவும் முடியாதுமுடித்துவிடவும் முடியாதுமுதல் படைப்பை எழுதிய போது உணர்ந்த அதே தவிப்பும் வேகமும் எல்லாக் கதைகளுக்கும் உண்டுஒவ்வொரு படைப்பும் எனக்கு முதல் படைப்பேஅந்தப் படைப்பு மனநிலையும் தீவிரமும் அப்படியே நீடித்திருக்கிறது.

புனைவுகளில் சிறுகதைத்துறையில் உங்கள் பங்களிப்பு அதிகம்எனக்கு உங்கள் 'குறிஎன்னும் சிறுகதை இன்னும் நினைவிலுண்டுஅது பற்றி வாசகர் கடிதமொன்றும் கணையாழியில் எழுதியுள்ளேன்ஒரு தனிமனிதன் ஒருவனின் இருப்பைச் சுற்றியிருக்கும் சமூகஅரசியற் சூழல் எவ்விதம் பாதிக்கின்றது என்பதை வெளிப்படுத்துமொரு கதையாக என் மனத்தில் அது நிற்கிறதுசிறுகதையொன்றை எழுதுகையில் உங்களுக்குத் தூண்டுதல் எவ்வாறு ஏற்படுகின்றதுஉங்களைப் பாதித்த சம்பவங்களை எழுத்தில் வடிக்கின்றீர்களாஅல்லது கருத்தொன்றினை வைத்துக் கதையைப் பின்னுகின்றீர்களா?

ஒவ்வொரு நாளும் எண்ணற்ற சம்பவங்களை கண்ணால் பார்க்கிறேன்பூங்காஏரிக்கரைஅஞ்சல் அலுவலகம்கடைத்தெருரயில்வே ஸ்டேஷன்பேருந்து நிலையம் என நான் செல்லும் இடங்களில் எல்லாம் ஏராளமான நிகழ்ச்சிகளை நேருக்கு நேர் பார்க்கிற வாய்ப்பு கிடைக்கிறதுஎத்தனையோ பார்த்தாலும் ஒருசில சம்பவங்கள் மட்டுமே நெஞ்சில் சட்டென பதிந்துவிடும்வேறு யாரையாவது சந்திக்கும் தருணத்தில் அவற்றைப்பற்றி எடுத்துச் சொல்லி பகிர்ந்துகொள்ளவும் தூண்டும்அவை ஒவ்வொன்றும் அப்படியே ஆழ்நெஞ்சில் தங்கிவிடும்என்னைப்போலவே சம்பவங்களைக் கவனிக்கும் விருப்பமுள்ள நண்பர்கள் தம் அனுபவங்களை என்னோடு பகிர்ந்துகொள்வார்கள்நான் பார்த்த சம்பவம்பிறர் பார்த்த சம்பவம்என் சொந்த அனுபவம்காதுகொடுத்துக் கேட்ட பிறருடைய அனுபவம் எல்லாமே கலந்து ஆற்றின் அடியில் மூழ்கிக் கிடக்கும் கூழாங்கற்களைப்போல ஆழ்நெஞ்சில் அமிழ்ந்திருக்கும்வேறொரு நாளில் வேறொரு சம்பவத்தைப் பார்க்கும்போதுஏதோ ஒரு காரணத்தால் திடீரென ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வரும்இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையும்தொட்டுக்கொள்ளும்மோதும்ஒரு கதையின் மையத்தை என் மனம் அப்படித்தான் கண்டடையும்மையம் உருவானதுமேபின்னணிக்கட்டுமானமும் பாத்திரங்களும் தானாகவே கூடிவந்துவிடும்புகைமூட்டமான அச்சித்திரங்களை அசைபோட்டபடி இருக்கும்போது தானாகவே ஒரு தொடக்கம் அமைந்துவிடும்செல்திசையும் தெரிந்துவிடும்எழுதத் தொடங்கி குத்துமதிப்பாக கதை போய்க்கொண்டே இருப்பேன்பொருத்தமான இடத்தில் கதை தானாகவே நின்றுவிடும்எதை நோக்கி வெளிச்சம் விழவேண்டுமோஅதை நோக்கி வெளிச்சம் தானாகவே விழுந்திருக்கும்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஒழுங்கு செய்து பிசிறுகளை நீக்கி செம்மைப்படுத்துவேன்இப்படித்தான் நான் எழுதும் சிறுகதைகள் உருவாகின்றன.

ஒரு சிறுகதையை முன்வைத்துச் சொன்னால்என் வழிமுறையை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள இயலும்சில ஆண்டுகளுக்கு முன்னால் அம்ருதா இதழில் வெள்ளைக்காரன் என்றொரு சிறுகதையை எழுதியிருந்ந்தேன்என் நண்பர்களுக்கு மிகவும் பிடித்தமான சிறுகதை அதுஅது உண்மைக்கதையாஅப்படி ஒருவர் இருந்தாரா என்று கேட்டுக்கொண்டே இருந்தனர்இருந்தார் என்பது உண்மைதான்ஆனால் முழுக்கதையும் அவருடையதல்லவேறொருவர் கதை வழியாக அவர் வெளிப்பட்டார் என்பதுதான் உண்மைஇத்தனை காலமும் என் நினைவில் இருந்தவர்இந்தக் கதையில் ஏன் திடீரென வெளிப்பட்டார் என்பதுதான் கவனிக்கப்படவேண்டிய விஷயம்ஒருநாள் ஒரு உணவு விடுதியில் காப்பி அருந்திக்கொண்டிருந்தேன்அப்போது சாலையில் ஓர் இறுதி ஊர்வலம் சென்றதுபல பேர் எழுந்து சென்று சாலையோரமாக நின்று அந்த ஊர்வலம் கடந்துபோகும் வரை வேடிக்கை பார்த்தனர்பிறகு ஒவ்வொருவராக நாக்கு சப்புக்கொட்டியபடி திரும்பி வந்து நாற்காலிகளில் அமர்ந்து காப்பி அருந்தவோபேசவோ தொடங்கினர்நான் அமர்ந்திருந்த மேசையை ஒட்டி அமர்ந்திருந்த இருவர் இறந்துபோனவரைப்பற்றி மிகவும் சிலாகித்து பேசியதைக் கேட்டேன்கேட்ட விவரங்களைக் கொண்டு அவரைப்பற்றிய சித்திரத்தை நானே மனத்துக்குள் தீட்டிக்கொண்டேன்அவர் யாரோ வெளிமாநிலத்துக்காரர்இளமைப்பருவத்தில் இந்த ஊருக்கு வந்தவர்மிகவும் சிரமப்பட்டு முன்னேறினார்தன்னைப்போலவே நகருக்குள் வந்து ஆதரவில்லாமல் கையேந்தி அலைந்துகொண்டிருந்த சிறுவனொருவனை தன்னோடு சேர்த்துக்கொண்டு மகனைப்போல வளர்த்தார்அவனுக்கு நல்ல வாழ்க்கையை அமைத்துக்கொடுத்தார்குடும்ப வாழ்க்கையையே அறியாமல் ஒரு துறவியைப்போல வாழ்ந்தவர் அவனுக்குத் திருமணம் செய்துவைத்து ஒரு குடும்பத்தை உருவாக்கிக் கொடுத்தார்எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து இங்கு வந்து வாழ்ந்து இந்த மண்ணில் மறைந்துவிட்டார்விதி எழுதிவைத்த கணக்கை ஒருவராலும் புரிந்துகொள்ளமுடியாதுஇப்படி ஒரு சித்திரத்தை உருவாக்கிக்கொண்ட பிறகுஅந்த ஊர்வலத்தைத் திரும்பிப் பார்த்தேன்வெகுதொலைவு சென்றுவிட்டிருந்ததுஅந்தப் பெரியவரைப்பற்றிய நினைவுகளை அசைபோட்டபடி நான் கடையிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வந்தேன்எதிர்பாராத கணமொன்றில் என் சிறுவயதில் நான் பார்த்த வெள்ளைக்காரனின் நினைவு வந்துவிட்டதுஅந்த முகம்அந்த உருவம்அவர் வாழ்க்கைஅவர் பின்னணிஅவர் பேச்சு எல்லாமே அடுத்தடுத்து நினைவுவந்துவிட்டதுஅவரும் இப்படித்தான் ஒருநாள் வேலை செய்துவந்த வீட்டைவிட்டு வெளியேறி மறைந்தார்எங்கே சென்றார் என்பது ஒருவருக்கும் தெரியாத மர்மமாகவே இருந்ததுஇறந்துபோன பெரியவரின் இடத்தில் என் மனம் அந்த வெள்ளைக்காரனைப் பொருத்திப் பார்த்ததுசரியான பொருத்தம் என்று தோன்றிய கணமே அந்தக் கதை பிறந்துவிட்டதுதொடக்கக்காட்சி கூட மனத்தில் உருவாகிவிட்டதுவீட்டுக்குத் திரும்பிய கணமே மடிக்கணினியைத் திறந்து எழுதத் தொடங்கிவிட்டேன்.

உங்கள் சிறுகதைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்த சிறுகதை எதுஏன்?

என் எல்லாச் சிறுகதைகளும் எனக்கு மிகவும் பிடித்தமானதுதான்எனக்கு நிறைவைத் தராத சிறுகதையை நான் தொடங்கவே மாட்டேன்ஆனால் நீங்கள் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டுவிட்ட நிலையில் இப்படி ஒரு பொதுவான பதிலோடு நிறுத்திக்கொள்ள நான் விரும்பவில்லைஏதேனும் ஒரு சிறுகதையைச் சொல்வதுதான் சரியாக இருக்கும்சமீபத்தில் வல்லினம் என்னும் இணைய இதழில் ‘சாம்பல்’ என்னும் சிறுகதையை எழுதினேன்அக்கதை பல வாசகர்களின் வரவேற்பைப் பெற்றதுநகரத்தில் வாழும் ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனுடைய தந்தை திடீரென இறந்துவிடுகிறார்அக்கம்பக்கத்தில் அந்தப் பெரியவருக்குத் தெரிந்த குடும்பங்களில் யாராவது ஒருவர் இறந்துவிட்டால்இறந்தவரின் சாம்பலை எடுத்துச் சென்று காசியில் கரைத்துவிட்டு வரும் பழக்கத்தைப் பின்பற்றுவதைப் பார்த்துப்பார்த்துஅதுதான் சரியான முறை போலும் என அவர் நினைத்துக்கொள்கிறார்தன் மகனிடம் தன் மறைவுக்குப் பிறகு தன்னுடைய சாம்பலை எடுத்துச் சென்று காசியில் கங்கைக்கரையில் கரைத்துவிட்டு வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறார்மகனும் அவர் கோரிக்கையை ஏற்றுக்கொள்கிறான்சில ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அப்பா உண்மையிலேயே இறந்துபோய்விடுகிறார்அப்போதுஅப்பாவின் சாம்பலை என்ன செய்வது என்று புரியாமல் குழம்புகிறான் மகன்செலவுக்குத் தேவையான பணத்தைப் புரட்டமுடியாத சூழல்இது கணவன் மனைவிக்கு நடுவில் அந்தச் சாம்பல் வீண் மனஸ்தாபத்தை ஏற்படுத்துகிறதுமனக்கொதிப்பில் திருட்டு ரயிலேறி காசிக்குப் போகத் தீர்மானித்து ஸ்டேஷனுக்குச் சென்றுவிடுகிறான் மகன்ஆனால் அவன் மனசாட்சி அத்திருட்டுத்தனத்தைச் செய்ய ஒப்பவில்லைசோர்வும் குழப்பமும் கொண்ட மனநிலையோடு வீட்டுக்குத் திரும்பி நடந்து செல்கிறான்வழியில் தென்பட்ட ஏரிக்கரையில் களைப்பில் படுத்து ஓய்வெடுக்கிறான்பொழுது சாய்ந்த நேரத்தில்தான் விழிப்பு வருகிறதுஅப்பாவிடம் மன்னிப்பை யாசித்தபடி அந்த ஏரியிலேயே சாம்பலைக் கரைத்துவிட்டு வீட்டுக்குத் திரும்புகிறான்எழுதிய பிறகு எனக்கு மிகவும் நிறைவையளித்த சிறுகதை இது.

பல்வகையான இலக்கியப்போக்குகள் குறித்துக் காலத்துக்காலம் தர்க்கங்கள் எழுவது வழக்கம்அவை பற்றி என்ன கருதுகின்றீர்கள்?

அது இயற்கைஅதை ஒருபோதும் தவிர்க்கமுடியாது. ’பழையன கழிதலும் புதுவன புகுதலும் வழுவலகால வகையினானே’ என்னும் நன்னூல் வரிகளையே நான் முன்வைக்க விரும்புகிறேன்உலகத்தில் இலக்கியப்போக்குகள் மட்டுமல்லஆடை உடுத்தும் போக்குவீடு கட்டும் போக்குகல்வி கற்கும் போக்குவேலை செய்யும் போக்கு என எல்லாவற்றிலுமே காலத்துக்குக் காலம் மாற்றம் தோன்றிக்கொண்டே இருக்கிறதுஒவ்வொன்றிலும் ஒரு சிறப்பம்சம் இருந்தே தீரும்சங்க காலத்துப் பாடல்கள் முழுக்கமுழுக்க ஆசிரியப்பா பாவினத்தை ஒட்டியே அமைந்திருக்கிறதுதிருவள்ளுவர் எழுதிய திருக்குறள் ஒன்றேமுக்கால் அடியில் குறள்வெண்பா என்னும் வடிவத்தில் அமைந்திருக்கிறதுகம்பராமாயணமும் பெரிய புராணமும் விதம்விதமான விருத்தப்பாக்களால் நிறைந்திருக்கின்றனபாரதியார் காலத்தில் சிந்தும் கண்ணியும் கொடிகட்டிப் பறந்திருக்கின்றனபிச்சமூர்த்தி காலத்தில் யாப்பிலக்கணத்தையே கவிதை துறந்து நிற்கிறது. எந்தப் போக்கிலும் மாறாத விதி என ஒன்றுமில்லைஎந்தப் போக்கின் வழியாக இருந்தாலும்எந்த வடிவத்திலும் ஒரு படைப்பு எழுதப்படலாம்அந்த சுதந்திரம் எல்லாப் படைப்பாளிகளுக்கும் இருக்கிறதுஅந்தப் படைப்பு மிகச்சிறந்ததாக அமைந்துஅந்தப் போக்குக்கு நியாயம் செய்வதாக இருக்கவேண்டும்அது மட்டுமே காலத்தில் நீடித்து நிற்கும்.

தமிழ்இந்திய உலக இலக்கியத்தில் உங்களைக் கவர்ந்த படைப்புகள் எவைபடைப்பாளிகள் எவர்?

பிடித்த படைப்புகள் என்றால் பெரிய பட்டியலையே கொடுக்கமுடியும்ஆனால் ஒரு கேள்வி பதிலில் அப்படி ஒரு பட்டியலுக்கு இடமில்லைசுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன்தமிழ்ச்சிறுகதைகளில் நான் மீண்டும் மீண்டும் படிப்பவை அழகிரிசாமியின் சிறுகதைகள்ஏதோ ஒரு வகையில் அவர் உருவாக்கும் கதையுலகம் எனக்கு உவப்பானதாகவும் நான் இப்போது உருவாக்கிக்கொண்டிருக்கும் உலகத்தைப்போன்ற ஒன்றாகவும் தோன்றுவதுண்டுஅடுத்துபுதுமைப்பித்தன்சுந்தர ராமசாமிதி.ஜானகிராமன்அசோகமித்திரன்கி.ராஜநாராயணன்வண்ணதாசன் ஆகியோரின் சிறுகதைகளையும் நான் விரும்பிப் படிப்பதுண்டுநாவல் வரிசையில் .நா.சு.வின் பொய்த்தேவுசுந்தர ராமசாமியின் ஒரு புளியமரத்தின் கதைஅசோகமித்திரனின் கரைந்த நிழல்கள்விட்டல்ராவின் நதிமூலம்சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணிபூமணியின் பிறகுகி.ராஜநாராயணனின் கோபல்ல கிராமம்ஜெயமோகனின் கொற்றவைவெங்கடேசனின் காவல் கோட்டம்எம்.கோபாலகிருஷ்ணனின் மனைமாட்சி எனக்குப் பிடித்தமானவைஇந்திய நாவல் வரிசையில் சிவராம காரந்தின் மண்ணும் மனிதரும்தகழியின் ஏணிப்படிகள்வைக்கம் முகம்மது பஷீரின் மதிலுகள்தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம்விபூதிபூஷன் பந்தோபாத்யாயவின் பதேர் பாஞ்சாலிஅதீன் பந்தோபாத்யாயவின் நீலகண்டப்பறவையைத் தேடிபிரேம்சந்தின் கோதானம்முகுந்தனின் மய்யழிக்கரையோரம்எஸ்.எல்.பைரப்பாவின் பருவம்எம்.டி.வாசுதேவன் நாயரின் நாலுகட்டு வீடு ஆகியவை எனக்குப் பிடித்தமானவைஉலகநாவல் வரிசையில் லியோ தல்ஸ்தோயியின் அன்னா கரினினாபோரும் வாழ்வும்தஸ்தாவெஸ்கியின் கரமசோவ் சகோதரர்கள்சூதாடிகுப்ரினின் யாமாமாக்சிம் கார்க்கியின் அர்தமோனவ்கள்துர்கனேவிப் தந்தையும் தனயர்களும்விக்டர் ஹியுகோவின் ஏழை படும் பாடுசார்லஸ் டிக்கன்ஸின் இரு நகரங்களின் கதைஹெமிங்க்வேயின் கடலும் கிழவனும்ஹெர்மன் ஹெஸெயின் சித்தார்த்தாஜாக் லண்டனின் கானகத்தின் குரல் ஆகிய நாவல்களை ஒன்றுக்கு மேற்பட்ட முறை படித்து மகிழ்ந்திருக்கிறேன்.

உங்களது கன்னடப்படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு மகத்தான இலக்கியப் பங்களிப்புபணி நிமித்தம் பெங்களூர் சென்றபின் கன்னட மொழி படித்துஅதில் பாண்டித்தியம் பெற்று மொழிபெயர்த்ததாக அறிகின்றோம்பைரப்பாவின் மகாபாரதத்தின் மறு வாசிப்பான பர்வம் தமிழில் பருவம் என்னும் தலைப்பில் தமிழில் வெளியாகியுள்ளதுஅந்நூல் என்னிடமுமுள்ளதுஅதற்காக மொழிபெயர்ப்புக்கான இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமி விருது பெற்றதாக அறிகின்றேன்வாழ்த்துகள்அந்த மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றிச் சிறிது கூறுங்களேன்ஏன் அந்தப் படைப்பை மொழிபெயர்க்க வேண்டுமென்று தீர்மானித்தீர்கள்?

இந்திய நாவல்களில் பருவம் மிகமுக்கியமான படைப்புஅதன் மகாபாரதப்பின்னணி அந்நாவலுக்கு கூடுதலான பரிமாணங்களை அளிக்கிறதுகுருக்ஷேத்திரப்போருக்கான தயாரிப்பு வேலைகளில் தொடங்கி போர் முடிவடையும் தருணம் வரைக்குமான காலமே அந்த நாவல் நிகழும் காலம்ஒருவரையொருவர் வென்று நிலத்தை ஆட்சி செய்ய விழையும் முடியாட்சிக்காலத்துக்கதைபோர் என்பது மனித குல அழிவுக்கே வித்திடும் என்பதும் எத்தனை சமத்காரமான பொய்களின் துணையோடும் தந்திரங்களின் துணையோடும் போரை நிகழ்த்தினாலும் இறுதியில் எஞ்சும் துயரமும் இழப்புகளும் எல்லையற்றவை என்பதும் இன்றைய குடியாட்சிக்காலத்துக் கருத்துஒரு முடியாட்சிக்காலத்துக் கதையைச் சொல்லும் சாக்கில் குடியாட்சிக்காலத்துக் கருத்தை அழகாகச் சித்தரிக்கிறது அந்த நாவல்பெரும்பாலான நிகழ்ச்சிகள் பெண் பாத்திரங்களின் பின்னோக்குப்பார்வையில் நடைபெறுகின்றனபோரில் உயிரிழப்பவர்கள் ஆண்கள் என்றபோதும்துணையின்றி துயரத்தில் தவிப்பவர்கள் பெண்கள் என்னும் உண்மையை இறுதிக்காட்சிகள் உணர்த்துகின்றனஎழுதப்பட்ட காலத்தில் மட்டுமல்லஇன்றைய காலத்துக்கும் அது பொருத்தமான நாவல்.

எழுத்தாளர் சித்தலிங்கையாவின் சுயசரிதையை 'ஊரும் சேரியும் ' தலைப்பில் தமிழில் மொழிபெயர்த்துள்ளீர்கள்தலித் எழுத்தாளரின் நெஞ்சை அதிர வைக்கும் அனுபவங்கள் அவைஉங்களது இவ்வகையான தலித் எழுத்தாளர்களின் மொழிபெயர்ப்புகளும் தமிழில் தலித் இலக்கியம் வளர்வதற்கு ஆரோக்கியமான் பங்களிப்பை நல்கியுள்ளன என்றும் கருதப்படுகின்றதுஇது பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?

என் மொழிபெயர்ப்புகள் ஆரோக்கியமான பங்களிப்பை நல்கியுள்ளன என்பதைக் கேட்க மகிழ்ச்சியாகவே இருக்கிறதுஆரோக்கியமான ஒரு தொடக்கம் நம் மொழியிலும் சமூகத்திலும் நிகழவேண்டும் என்ற என் விருப்பம் நிறைவேறியிருப்பதைக் காண நிறைவாக உணர்கிறேன்.

கன்னடத்திலிருந்து நாவல்நாடகம்கவிதைசுயசரிதை என்று பல்வகைப்படைப்புகளையும் தமிழுக்குக் கொண்டு வந்துள்ளீர்கள்உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் உழைப்பு அதுமொழிபெயர்க்கும் ஆர்வம் உங்களுக்கு எப்போது ஏற்பட்டதுஅதற்கு ஏதாவது தூண்டுதல்கள் உள்ளனவா?

மிகவும் தற்செயலாகவே நான் மொழிபெயர்க்கத் தொடங்கினேன்நான் கன்னட மொழியைக் கற்றுக்கொள்ளத் தொடங்கியபோது இலக்கிய வாசிப்பு மட்டுமே என் இலக்காக இருந்ததுஅந்த வழியிலேயே நான் சென்றுகொண்டிருந்தேன்பெங்களூரில் நான் குடியேறியதும் இந்தி மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டிருந்த திருமதி சரஸ்வதி ராம்னாத் அவர்களைச் சந்தித்து உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்ஒருமுறை அவர் இந்திய மொழிகளின் நாடகங்களை மொழிபெயர்ப்பு வழியாகத் தொகுக்கும் முயற்சியை அவர் தொடங்கினார்வட இந்திய மொழிகளில் வெளியான நாடகங்கள் ஏதோ ஒரு வகையில் இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தனஅதனால் அவற்றை அவர் எளிதாகத் தேடித் தொகுத்துவிட்டார்தென்னிந்திய மொழி நாடகங்களைத் தேடியெடுப்பதில் அவருக்குச் சிரமமிருந்ததுஅதனால் அந்தந்த மொழி தெரிந்தவர்கள் உதவியோடு மொழிபெயர்த்துப் பெற்றுக்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்தார்அப்படிப்பட்ட சூழலில்தான் அவர் கன்னட நாடகமொன்றை மொழிபெயர்த்துக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்மொழிபெயர்ப்பு முயற்சியில் இறங்க எனக்குப் பெரிதும் தயக்கமிருந்துஆனால் அவர் அதைத் தன் ஆலோசனைகளால் களைந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட வைத்தார்காலம் செல்லச்செல்ல அதன் அருமை எனக்குப் புரிந்ததுகன்னடச்சூழலில் வாழும் வாய்ப்பு கிடைத்திருக்கும் நிலையில் நல்ல இலக்கியமுயற்சிகளைத் தமிழ்ச்சமூகத்துக்கு அறிமுகப்படுத்துவதற்குக் கிடைத்த நல்வாய்ப்பாக நினைத்துக்கொண்டேன்தொடர்ந்து மொழிபெயர்க்கும் முயற்சியில் ஊக்கமுடன் செயல்படத் தொடங்கினேன்.

சிறுகதைத்தொகுப்புகள் ,குழந்தை இலக்கியத் தொகுப்புகள்மொழிபெயர்ப்புகள் , கட்டுரைத்தொகுப்புகள் என்று அதிக அளவில் உங்கள் நூல்கள் வெளியாகியுள்ளனஅந்த அளவுக்கு உங்களடைய நாவல்கள் அதிக அளவில் வெளிவந்ததாகத் தெரியவில்லைஇனிமேல் உங்களிடமிருந்து அதிக அளவில் நாவல்களையும் எதிர்பார்க்கலாமா?

உண்மைதான்அது ஒரு குறையேஆனால் தவிர்க்கமுடியாத சூழலால் அப்படி நேர்ந்துவிட்டதுஇரண்டு நாவல்களை தொடங்கி சில நூறு பக்கங்கள் வரை எழுதி அரைகுறையாக நிறுத்தி பல ஆண்டுகளாகின்றனஏதோ ஒரு தடைஅதைக் கடந்துவரத் தெரியாமல் தடுமாறி நின்றுவிட்டேன்ஒவ்வொரு முறையும் அவற்றை முடித்துவிட வேண்டும் என்றுதான் மனம் வேகம் கொள்கிறதுவெகுவிரைவில் அவற்றை முடித்து என் மனக்குறையைப் போக்கிக்கொள்வேன்.

நல்லது பாவணணன்இதுவரை உங்கள் எண்ணங்களைப் பதிவுகள் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டீர்கள்பதிவுகள் வாசகர்களுக்கு , இளம் எழுத்தாளர்களுக்கு என்ன கூற விரும்புகின்றீர்கள்?

கால்நூற்றாண்டுக்கும் மேலாக தொடர்ந்து இயங்கிவரும் தளம் பதிவுகள்இணைய உலகம் தொடங்கிய காலத்திலிருந்தே அது வாசகர்களுக்கு நல்லதொரு இலக்கிய அறிமுகத்தை வழங்குவதைத் தன் கடமையாகக் கொண்டிருக்கிறதுவாசகர்கள் அந்த அறிமுகத்தை ஒரு நுழைவாயில் குறிப்பாகக் கொண்டு படைப்புகளை நேரிடையாகத் தேடியடைந்து படித்து மகிழவேண்டும்இளம் எழுத்தாளர்கள் மீது எனக்கு எப்போதுமே நம்பிக்கை உண்டுஊக்கம் குன்றாமல் அவர்கள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும்எக்காலத்திலும் எதிர்மறை சிந்தனைகளுக்கு இடமளித்து விடக்கூடாது.