“என்ன,
சீக்கிரம் சொல்லு” என்று அவசரப்படுத்தினார் ராஜா.
“எந்த வீடா இருந்தாலும் கட்டற வேலை மட்டும்தான் என்னை மாதிரியான ஆட்களுடையது. கட்டறதுக்கு முக்கியத் தேவையான செங்கல் எல்லாம் வேற ஒரு ஆளு சூளையில சுட்டு கொண்டுவரக்கூடிய பொருட்கள்தான். அந்தச் செங்கல்லுலதான் ஏதோ ஒரு தப்பு நடந்திருக்கணும் ராஜா” என்று சொல்லிவிட்டு நிறுத்தினான் கட்டடவேலை செய்பவன்.