Home

Sunday, 29 December 2024

என்.ஆர்.தியாகராஜன்: சமூகத்தொண்டும் சங்கிலித்தழும்பும்

 

தீண்டாமை ஒழிப்பு பரப்புரைக்காக நாடு தழுவிய ஒரு பெரும்பயணத்தை மேற்கொண்டிருந்த காந்தியடிகள் தமிழகத்துக்கு வந்திருந்தபோது, ஏறத்தாழ எல்லா முக்கிய நகரங்களுக்கும் சென்றார் என்று கூறும் அளவுக்கு விரிவான அளவுக்கு பயணம் செய்தார். பழமைவாதிகளின் எச்சரிக்கையை மீறி ஏராளமான ஆண்களும் பெண்களும் காந்தியடிகள் உரையாற்றிய எல்லாக் கூட்டங்களிலும் கலந்துகொண்டனர். அவர்கள் தம் சுற்றுப்பயணத்தின் நோக்கத்தைத் தெரிந்துகொண்டிருக்கிறார்களா என்பதை அறிந்துகொள்வதற்காக ”நீங்கள் இந்த நிதியை எதற்காக அளிக்கிறீர்கள்?” என்று நேரிடையாகவே கேட்டபோது, அனைவரும் உற்சாகமான குரலில் “தாழ்த்தப்பட்டோர்களின் முன்னேற்றத்துக்காகத்தான்” என்று மக்கள் விடையளித்தனர். அந்தப் பதிலைக்  கேட்டு காந்தியடிகள் மனம் குளிர்ந்தார்.

விஷ்ணுபுரம் விருது விழா - சில நினைவுப்பதிவுகள்

 

24.12.2024

அன்புள்ள நண்பருக்கு

வணக்கம். நலம்தானே? வளவனூருக்குத் திரும்பிவிட்டேன். இன்னும் சில நாட்கள் இங்குதான் இருக்கவேண்டும்.

21, 22 இருநாள் விழா நிகழ்ச்சிகளும் கனவுக்காட்சிகளைப்போல நினைவில் மிதந்தபடி இருக்கின்றன.

Monday, 23 December 2024

வக்கிரம் - சிறுகதை

 

“சந்தத் தோப்புக்கு எப்படி போவணும்?’’ என்று கேட்பவர்களுக்கு ஒரு சின்னப்பிள்ள் கூட வழி காட்டிவிடும். ஊருக்குக் கிழக்கே தள்ளி இருக்கிறது அது. புதுசாகப் பார்க்கிற வெளியூர்க்காரன் ‘‘ஆயிரம் மாடுங்கள கொண்டாந்து கட்டலாம்பலக்குதே” என்று மூக்கில் விரல் வைத்து விடுவான். அவ்வளவு விஸ்தாரம். அவ்வளவு மரங்கள். தோப்பைச் சுற்றிச் சின்னச் சின்ன ஒற்றையடிப் பாதைகள் நீள்கின்றன. ஒரு பாதை சின்னபாபு சமுத்திரம் ரயில்வே ஸ்டேஷன் வரைக்கும் போகிறது. பாண்டிச்சேரிக்குக்கூட குறுக்குப்பாதை ஓடுகிறது. நிலா உச்சியில் இருக்கும்போது மாடுகள் ஓட்டிக்கொண்டு கிளம்பினால் விடியவிடிய பாண்டிச்சேரிக்குப் போய்ச் சேரமுடியும். தோப்பின் முகம் சாலையைப் பார்த்தபடி இருக்கிறது. தோப்பின் இடதுகைப்பக்கத்தில் ஆறாம் நெம்பர் சாராயக்கடை.

ஏழு லட்சம் வரிகள் - சிறுகதை

 

வெகு அருகில் சருகுகள் மிதிபடும் ஓசையைக் கேட்டு குணிதேவரும் நந்திதேவரும் குடிலுக்கு வெளியே வந்து பார்த்தார்கள். ஏதாவது விலங்காக இருக்குமோ என்கிற அச்சம் மனத்தில் சட்டெனப் பரவியதில் அவர்களுடைய இதயத் துடிப்புகள் அதிகரித்தன. இருளில் முதலில் எதையுமே சரியாகப் பார்க்க இயலவில்லை. சில கணங்களுக்குப் பிறகு குடிலை நோக்கி வரும் உருவத்தை அடையாளம் கண்டார்கள். அவசரமாக “வணக்கம் குருவே, வாருங்கள் என்றார்கள்.

Sunday, 15 December 2024

சாபம் - சிறுகதை


ஏற்பாடு செய்தாயா என்று கேட்டார் அப்பா. திறவுகோல் கொத்தை மாடத்தில் வைத்துவிட்டு நிமிர்ந்தேன். தந்தையின் பார்வை என் மேலேயே பதிந்து கிடந்தது. சாதகமான ஒரு பதிலை எதிர்பார்க்கும் ஆசை துடிக்கும் அந்தக் கண்கள் நேருக்கு நேர் சந்திக்க முடியவில்லை. சுவரோரம் சரிந்து உட்கார்ந்தேன்.

கிணறு - சிறுகதை

 

பறையன் மாரப்பன் பாடெடுத்த வல்கிணற்றில்

நிறைகுட நீர்எடுத்துத் திரும்பும் பெண்டிரை

**

கடும் ராஜதண்டனைக்குள்ளான மாரப்பன் அல்லும் பகலும் ஓய்வு ஒழிச்சலில்லாமல் கிணறு தோண்டியபடி இருக்க ஈட்டியோடும் கேடயங்களோடும் சுற்றிலும் அரசாங்க வீரசேனை காவலிருந்தது. வேற்று ஆள்கள் அன்னதானம் செய்யாதபடிக்கும், சிரமதானம் செய்யாதபடிக்கும் அவர்கள் காவல் இருந்தார்கள்....

**

Sunday, 8 December 2024

பாவண்ணன் நேர்காணல் - 1

 

எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே


பாவண்ணன் சமகால  நவீனத் தமிழ் இலக்கியச்சூழலில்முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர். சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இடையறாது தமது பங்களிப்பை அளித்துவருகிறார்.  கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர்மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருதுதமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடாவாழ்நாள் சாதனைக்கான இயல்  விருது , விளக்கு அமைப்பின் வாழ்நாள்சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது, புதுச்சேரி அரசின், இலக்கியச்சிந்தனையின் சிறந்த நாவல் விருது என இவரது பங்களிப்புக்கு தமிழ்ச்சூழலில் தகுந்த கவனம் கிடைத்துள்ளதுடிசம்பர் மலேசியாவில் நடைபெறும் வல்லினம் விழாவுக்கு வருகை தரும் அவரை மலேசிய வாசகர்கள் கூடுதலாக அறிந்துகொள்ளும் வகையில் இந்நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது.

பாவண்ணன் நேர்காணல் - 2

வல்லினம் நேர்காணல் தொடர்ச்சி ....

வல்லினம்: உங்களுக்கு ஆதர்சமான இவ்விரு எழுத்தாளர்களையும் ஆகியோரைச் சந்தித்துள்ளீர்களா? அந்த அனுபவத்தைப் பகிர இயலுமா?

பாவண்ணன்: நான் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த காலத்திலேயே அழகிரிசாமி மறைந்துவிட்டார். அவருடைய மறைவுக்குப் பிறகுதான் அவருடைய புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பிற்காலத்தில், அவருடைய ஒட்டுமொத்த சிறுகதைகளை காலச்சுவடு ஒரு பெருந்தொகுதியாகக் கொண்டுவந்த போது, அத்தொகுதிக்கு அழகியல் நோக்கில் ஒரு நீண்ட முன்னுரையை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு அமையும் என்று நான் அக்காலத்தில் ஒருமுறை கூட நினைத்துப் பார்த்ததில்லை.

பாவண்ணன் நேர்காணல் - 3

 வல்லினம் நேர்காணல் தொடர்ச்சி....

வல்லினம்: தமிழைத் தவிர இந்தியாவின் பிற மொழிகளில் தலித் இலக்கியத்தின் போக்கு எவ்வாறு உள்ளது?

பாவண்ணன்: தமிழ், கன்னடம், ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெளிவரும் படைப்புகளைப்பற்றித் தெரிந்துகொள்ளும்  வாய்ப்பு இல்லாத சூழலில் இக்கேள்விக்கு என்னால் நேரடியான பதிலைச் சொல்வதில் தயக்கமிருக்கிறது. ஆனால், இதையொட்டி எனக்குத் தெரிந்த ஒரு தகவலை மட்டும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். 

இரண்டு ஓவியங்கள்

  

ட்டி.என்.ஏ.பெருமாள் என்கிற தஞ்சாவூர் நடேசாச்சாரி அய்யம்பெருமாள் என்பவர் இந்தியாவின் மிகச்சிறந்த கானுயிர் புகைப்படக்கலைஞர். 2017ஆம் ஆண்டில் தம் எண்பத்தைந்தாம் வயதில் அவர் மறைந்தார். வாழ்க்கையனுபவக் கட்டுரைகளைப் விரும்பிப் படிக்கும் வாசகர்களுக்கு அவர் எழுதிய ’கானுயிர் புகைப்படக்கலைஞனின் நினைவுக்குறிப்புகள்’ (Reminiscences of a wildlife photographer) என்னும் புத்தகம் மிகவும் பிடித்தமானதாக இருக்கும்.

Wednesday, 4 December 2024

திசைகளைநோக்கி விரிவடையும் கோடுகள்

  

எண்பதுகளின் இறுதியில் ஜூனியர் விகடன் வார இதழில் கி.ராஜநாராயணன் கரிசல் காட்டுக் கடுதாசி என்னும் தலைப்பில் ஒரு தொடரை எழுதினார். அத்தொடரில் செவிவழிச் செய்தியாக அறிந்தவர்கள் என்றும் நேரில் பார்த்துப் பழகியவர்கள் என்றும் பலவிதமான மனிதர்களையும் சில அபூர்வமான வாழ்க்கைத் தருணங்களையும் அழகான சொற்சித்திரங்களாகத் தீட்டினார். வாசகர்களின் நெஞ்சில் இன்றும் நிலைத்திருப்பவை அச்சித்திரங்கள். அந்த எழுத்துச் சித்திரங்களுக்கு உய்¢ரூட்டும்வகையில் எளிமையும் அழகும் மிளிரும் கோட்டுச் சித்திரங்களை ஒவ்வொரு வாரமும் அத்தொடருக்காக வரைந்தளித்தவர் ஆதிமூலம். எழுபதுகளின் சிற்றிதழ்களின் வழியாகவும் சிறிய பதிப்பகங்களின் முகப்போவியங்கள் வழியாகவும் இலக்கிய வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான ஆதிமூலத்தின் கோட்டோவியங்கள் கி.ரா.வின் எழுத்துலகத்துக்கு கூடுதல் பரிமாணத்தை வழங்கின. நல்ல எழுத்துகளும் நல்ல சித்திரங்களும் இணைந்து சிந்தனைக்கு ஊக்கமளித்தன.

சிறுபத்திரிகையின் சாட்சி

  

தமிழிலக்கியத்தில் நவீனத்துவம் அழுத்தமாக வேரூன்றியதில் தமிழில் தோன்றிய சிறுபத்திரிகை மரபு ஆற்றிய பங்கு முக்கியமானது.  தொடக்க காலத்தில் செய்திகளுக்கான ஊடகமாகவும் விளம்பரங்களுக்கான களங்களாகவும் உருவான பத்திரிகைகள், கொஞ்சம் கொஞ்சமாக தம் வாசகர்களின்  வளையத்தை பெரிதாக்கிக்கொள்ளும் பொருட்டும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டும் பொழுதுபோக்குக்கூறுகளையும் தம் உள்ளடக்கங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளத் தொடங்கின. இலக்கியப்படைப்புகளும் அதன் ஒரு பகுதியாக இடம்பெறத் தொடங்கின.  ஒரு புதிய ஊடகம் ஒரு சமூகத்தில் தன்னை நிலைக்கவைத்துக்கொள்ளும் பயணத்தில், இது தவிர்க்க இயலாத ஒரு செயல்பாடாகும்.  இப்படித்தான் தமிழ்ச்சூழலிலும் நிகழ்ந்தது. 

Sunday, 24 November 2024

ஒளி ஓவியமும் சொல்லோவியமும்

  

மனித உருவத்தை வரையும் பழக்கம் குகைகளில் மனிதர்கள் வசித்த காலத்திலேயே தொடங்கியிருந்தாலும், அது பல நூற்றாண்டுகள் வரைக்கும் தோராயமான ஒரு வடிவமாகவே இருந்தது. அதற்குப் பிறகான காலகட்டத்தில்தான், நேருக்கு நேர் ஒரு மனிதரைப் பார்த்து அவரைப்போலவே ஓவியமாகத் தீட்டிவைக்கும் பழக்கம் ஏற்பட்டது. பல ஓவியர்கள் தமக்குப் பிடித்த காடுகள், மலைகள், ஆறுகள், பாலைவனங்கள், கோட்டைகள், அரண்மனைகள், கடைத்தெருக்கள் என பல இடங்களில் சுற்றியலைந்து தமக்குப் பிடித்த காட்சிகளை ஓவியங்களாகத் தீட்டினார்கள். பிற்காலத்தில் அவை பல தொகைநூல்களாக வெளிவந்தன. 

ஒரு துளி காவேரி

  

பூம்புகாரின் பெருமையை முன்வைக்கும்போது இளங்கோவடிகள் ஒற்றை வரியில் ‘பதியெழு அறியாப் பழங்குடி’ என்று குறிப்பிடுகிறார். பூம்புகார் நகரத்தில் வசிக்கும் மக்கள் எந்தக் காரணத்துக்காகவும் எந்தத் தேவைக்காகவும் சொந்த ஊரைவிட்டு எந்தக் காலத்திலும் வெளியே சென்றறியாத, செல்லவேண்டிய அளவுக்கு எவ்விதமான நெருக்கடிகளும் இல்லாதவர்களாக வாழ்கிறார்கள் என்பதைக் குறிப்பால் உணர்த்துவதற்காக அந்த வரியை எழுதியிருக்கிறார் இளங்கோவடிகள். 

Sunday, 17 November 2024

புன்னகையின் வெளிச்சம்

 

மீனாட்சி அக்கா ஜன்னலோரமாக தையல் மிஷினில் புடவைக்கு ஃபால்ஸ் வைத்து தைத்துக்கொண்டிருந்தாள். காமாட்சி அக்கா தூணில் சாய்ந்தபடி மடியில் முறத்தை வைத்துக்கொண்டு வேர்க்கடலையை தோல் உரித்துக்கொண்டிருந்தாள். ”வேலை விஷயமா ஒரு கம்பெனி மானேஜர பார்க்கப் போவலாம் வாடான்னு ராகவன் சொல்லியிருந்தான். நெல்லித்தோப்பு வரைக்கும் போயிட்டு வரேங்க்கா” என்று இரண்டு அக்காக்களிடமும் பொதுவாக விடைபெற்றுக்கொண்டு ’சின்னஞ்சிறு கிளியே என் சித்திரப் பூங்குயிலே’ என ஒரு சினிமாப்பாட்டை முணுமுணுத்தபடி வெளியே வந்தான் குமாரசாமி. 

இனிய சொற்சித்திரங்கள்

 

’அன்பால் என்ன செய்யமுடியும் என்னும் கேள்விக்கு, அன்பால் செய்யமுடியாதது என ஏதேனும் ஒன்று இந்த உலகத்தில் இருக்கிறதா என்னும்  இன்னொரு கேள்வியே விடை. அன்பு எதையும் எதிலிருந்தும் எதற்காகவும் பிரியாது. நான் இதைக் கொடுத்தால் நீ என்ன கொடுப்பாய் என அன்புக்கு பேரம் பேசவும் தெரியாது. நான் கொடுக்கிறேன், நீ பெற்றுக்கொள் என பெருமை பேசும் பழக்கமும் அன்புக்கு இல்லை. யாரும் பார்க்காவிட்டாலும் யாரும் ரசிக்காவிட்டாலும் யாரும் கேட்காவிட்டாலும் பெய்துகொண்டே இருக்கும் மழையைப் போன்றது அது’

அடையாளத் தழும்புகள்


ஒரு மனிதனுடைய முதல் இருபத்தைந்து ஆண்டுக்கால வாழ்க்கை என்பது மிக முக்கியமான பகுதி. இந்த மண்மீது இருக்கிற எல்லாவற்றைப்பற்றியும் சொந்தமான ஒரு பார்வையை உருவாக்கிக்கொள்ளும் காலம் இது. எடுத்துக்காட்டாக உறவுகள், நட்பு, தெருமனிதர்கள், சாதிகள், தொழில், கல்வி, காமம் ஆகியவற்றைப்பற்றி இளமையில் உருவாகும் மனப்பதிவுகள் ஆழ்மனத்தில் அழுத்தமாகத் தங்கிவிடுகின்றன. எஞ்சிய காலத்தின் வாழ்க்கைப் படகைச் சீராகத் திசையறிந்து செலுத்த இந்த அனுபவ ஒளியே கலங்கரை விளக்கமாக நிற்கிறது.

Sunday, 10 November 2024

கலையின் வெற்றி

 

விட்டல்ராவின் வீட்டுக்கு மாலை நேரப் பொழுதுகளில் செல்லும்போதெல்லாம் நானும் அவரும் உரையாடிக்கொண்டே சிறிது தொலைவு நடந்துவிட்டுத் திரும்புவோம். திரும்பும்போது ஏதாவது ஒரு கடையில் தேநீரோ, காப்பியோ அருந்திவிட்டு வருவோம்.  நடைக்காக ஒதுக்கமுடிந்த நேர அளவை ஒட்டி, நாங்கள் நடக்கிற திசையும் தொலைவும் மாறும்.  அரை மணி நேரம் மட்டுமே ஒதுக்கமுடியும் என்றால் அடையாறு ஆனந்த பவன் பக்கமாக நடப்போம். ஒரு மணி நேரம் ஒதுக்க முடிந்தால் கல்கரெ சாலையில் உள்ள தேவாலயம் வரைக்கும் செல்வோம். அங்கே உள்ள ஈரானி கடையில் தேநீர் அருந்திவிட்டுத் திரும்பிவிடுவோம்.

சிறுபத்திரிகையின் சாட்சி

  

தமிழிலக்கியத்தில் நவீனத்துவம் அழுத்தமாக வேரூன்றியதில் தமிழில் தோன்றிய சிறுபத்திரிகை மரபு ஆற்றிய பங்கு முக்கியமானது.  தொடக்க காலத்தில் செய்திகளுக்கான ஊடகமாகவும் விளம்பரங்களுக்கான களங்களாகவும் உருவான பத்திரிகைகள், கொஞ்சம் கொஞ்சமாக தம் வாசகர்களின்  வளையத்தை பெரிதாக்கிக்கொள்ளும் பொருட்டும் தக்கவைத்துக்கொள்ளும் பொருட்டும் பொழுதுபோக்குக்கூறுகளையும் தம் உள்ளடக்கங்களில் ஒன்றாக எடுத்துக்கொள்ளத் தொடங்கின. இலக்கியப்படைப்புகளும் அதன் ஒரு பகுதியாக இடம்பெறத் தொடங்கின.  ஒரு புதிய ஊடகம் ஒரு சமூகத்தில் தன்னை நிலைக்கவைத்துக்கொள்ளும் பயணத்தில், இது தவிர்க்க இயலாத ஒரு செயல்பாடாகும்.  இப்படித்தான் தமிழ்ச்சூழலிலும் நிகழ்ந்தது. 

Sunday, 3 November 2024

வேர்கள் தொலைவில் இருக்கின்றன - சிறுகதை

 


போ போ என்று கிளிப்பிள்ளைக்குச் சொல்கிற மாதிரி சொல்லி அனுப்பியபோது ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கத்தில் நாவல் பழம் பொறுக்கவும், கடலோரம் ஆட்டம் போடவும் சுவாரஸ்யத்தோடு ஓடத் தொடங்கியதுதான் முதல் தப்பு. ஆட்டத்தில் ருசி கண்டு படிப்பை மறந்து எஸ்.எஸ்.எல்.சி.யில் தோற்றுப்போனது அடுத்த தப்பு. அக்டோபர் மார்ச் என்று மாற்றி மாற்றி நாலு தரம் எழுதியும் குறைந்தபட்ச மார்க்கில்கூட தேற வக்கில்லாமல் போனது அதற்கடுத்த தப்பு. எங்கேயும் நிரந்தரமாய் இல்லாமல் நாயுடு ஜவுளிக்கடையில் சில வருஷங்கள், தேவராஜ் சேட்டுக்கடையில் சில வருஷங்கள், பண்ருட்டி இரும்பு பேக்டரியில் சில வருஷங்கள் என்று மாறிமாறி உத்தியோகம் பார்த்தது  இன்னொரு தப்பு. வனஸ்பதி பேக்டரியில் வாட்ச்மேன் வேலைக்கு இன்டர்வ்யூ ஒன்று வீட்டுக்கு வந்திருந்த சமயத்தில் மனசு வெறுத்து ஊர் உறவு மறந்து பதினைந்து நாட்களுக்கு மெட்ராஸ் ஓடிவிட்டு வந்தது இன்னும் ஒரு தப்பு. இந்த லட்சணத்தில் சாந்தியை கல்யாணம் செய்துகொண்டு இரண்டு பிள்ளைகளுக்குத் தகப்பனாகிவிட்டது பெரிய தப்பு.

ஆறுதல் - சிறுகதை

 

 

அப்ரென்டிசாக இருக்கும் போதெல்லாம் காஷுவல் லீவு எடுக்கமுடியாது. அட்டென்டன்ஸ் போய்விடும். தேவைக்கு ஒருநாள் இரண்டுநாள் குறைச்சலாய் இருந்தாலும் பரீட்சைக்குப் போகமுடியாது. கஷ்டம் அடுத்த பரீட்சைக்குத்தான் அனுப்புவார்கள். அடுத்த பரீட்சைக்கு ஒரு வருஷம் ஆகும். வருஷ வருஷமாய் காத்திருப்பது ரொம்ப சிரமம். காத்திருக்கிறமாதிரி வீட்டு நிலைமை சரியில்லை. அதனால்தான் லீவ் எதுவும் இல்லாமல் மானேஜரிடம் பர்மிஷன் வாங்கிக்கொண்டு வந்திருந்தான் தங்கராசு. ‘இதோட மூணு பர்மிஷன் ஆய்ட்டுது மிஸ்டர். அடுத்த தரம் வரக்கூடாது. இப்பவே சொல்லிட்டன்’ என்று மிரட்டிய பிறகுதான் இந்தப் பர்மிஷனைக்கூடத் தந்திருந்தார் மானேஜர்.

Sunday, 27 October 2024

என்றென்றும் நிலைத்திருக்கட்டும்

  

விடுப்பு நாட்களில் புதுச்சேரிக்குச் செல்லும் நேரங்களில் நண்பரும் மொழிபெயர்ப்பாளருமான இளம்பாரதியைச் சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தேன். அவருடைய வீடு எங்கள் வீட்டிலிருந்து நடந்துசெல்லும் தொலைவில் இருந்தது ஒரு காரணம். அவர் தன் நினைவிலிருந்து பகிர்ந்துகொள்ளும் பழையகாலத்து அனுபவங்கள் கேட்பதற்குச் சுவாரசியமானவை என்பது இன்னொரு காரணம். அவருடைய அறையில் கண்ணாடிச்சட்டமிட்ட நிலைப்பேழைத் தட்டுகளில் அடுக்கியிருக்கும் பழைய, புதிய புத்தகங்களைப் புரட்டிப் பார்க்கும் ஆசை மற்றொரு காரணம்.

ரோஜா

 

மாற்று பாவாடை தாவணியை தோள்மீது போட்டுக்கொண்டு குளிப்பதற்காக வீட்டுக்குப் பின்னால் இருக்கும் கீற்றுப்படலை நோக்கிச் செல்லும்போது “தேவிகா, ஒரு நிமிஷம், இங்க வந்துட்டு போம்மா” என்று அடுப்பங்கரையிலிருந்து அம்மா அழைத்தாள்.

Sunday, 20 October 2024

விட்டல்ராவுக்கு விளக்கு விருது

 அமெரிக்காவில் வசிக்கும் தமிழிலக்கிய ஆர்வலர்களின் அமைப்பு கடந்த 27 ஆண்டுகளாக  கலை இலக்கியத்தில் சிறப்பாகப் பங்காற்றியவர்களைக் கெளரவிக்கும் விதத்தில் புதுமைப்பித்தன் நினைவாக விளக்கு விருது அளித்து வருகிறது. இவ்விருது ஒரு லட்ச ரூபாய் பரிசுத்தொகையும் பாராட்டுப்பத்திரமும் கொண்டது.

இதுவோ உலகத்தியற்கை?

 

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மைசூரிலிருந்து விஜயா ஹரன் என்பவர் தொலைபேசியில் என்னை அழைத்தார். மைசூர் வானொலி நிலையத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்றும் கன்னட எழுத்தாளர் எஸ்.எல்.பைரப்பாவைத் தன் ஆதர்ச எழுத்தாளராகக் கருதுபவர் என்றும் அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பைரப்பாவின் மீது தான் கொண்டிருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும் விதமாக அவருடைய ஆக்கங்களைப்பற்றிய கட்டுரைகளை பிறரிடமிருந்து எழுதி வாங்கித் தொகுத்து இரு பெருந்தொகுதிகளாக வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும் சொன்னார். அதற்குரிய கட்டுரைகளைத் திரட்டிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆற்றாமையும் பொறாமையும்

 

என் நண்பர் பழமொழிகளின் நேசர். பழமொழிகளையெல்லாம் தேடித்தேடி படிப்பவர். நெருக்கமாகப் பழகுகிறவர்களிடம், அவர்களுக்குத் தெரிந்த பழமொழிகளைச் சொல்லும்படி கேட்டுக்கொள்வார். அவர்கள் சொல்வதை உடனடியாகத் தன் குறிப்பேட்டில் எழுதிவைத்துக்கொள்வார். எபோதாவது என்னைச் சந்திக்க வரும்போது அதுவரை கேட்டறிந்த பழமொழிகளை முன்வைத்து உரையாடுவார். சிற்சில சமயங்களில் எங்கள் உரையாடல்கள் பழமொழிகளுக்குக் கூடுதலான விளக்கங்களைத் தேடிச் செல்லும் பயணமாகவும் அமைந்துவிடும்.

Sunday, 13 October 2024

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு

 

உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது. ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா. அதில் குறிப்பிட்டிருக்கிறார். அவற்றில். ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது. அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு. அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.

நினைவுச்சின்னங்கள்

 

தமிழ்த்தொண்டாற்றிய சான்றோர்கள் என்னும் முதன்மைத்தலைப்பும் இலக்கியம், இதழ்கள், பதிப்பகம் என வழங்கப்பட்டிருந்த துணைத்தலைப்பும்தான் இப்புத்தகத்தை உடனடியாக வாசிக்கத் தூண்டின. பொருளடக்கத்தில் முப்பத்தொன்று தமிழ்ச்சான்றோர்களின் பட்டியல் காணப்பட்டது. வீரமாமுனிவர், கால்டுவெல், மீனாட்சி சுந்தரம் பிள்ளை, சோமசுந்தர பாரதியார், தேவநேயப் பாவாணர், புதுமைப்பித்தன், கல்கி போன்றோர் அனைவரும் தெரிந்தவர்களாக இருந்தனர். அப்பட்டியலின் இடையிடையே காணப்பட்ட ஈஸ்வர சந்திர வித்தியாசாகர், பேராசிரியர் பி.என்.சீனிவாசாச்சாரியார், இ.மு.சுப்பிரமணியப்பிள்ளை, மோசூர் கந்தசாமி முதலியார், அரிராம் சேட், அப்பா நா.அருணாசலம், மேகலிங்கம் சுப்பிரமணியன் போன்ற பெயர்கள் அனைத்தும் இதுவரை அறியாத பெயர்களாக இருந்தன. அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும் என்னும் ஆர்வத்தாலேயே ஒரே மூச்சில் இப்புத்தகத்தைப் படித்துமுடித்தேன்.

Sunday, 6 October 2024

பா என்னும் மூதன்னை


நீண்டகாலம் தொடர்ச்சியாக நிலவிய பஞ்சத்தின் காரணமாகவும் பிளேக் தொற்றுநோயின் காரணமாகவும் 1918ஆம் ஆண்டில்  குஜராத்தைச் சேர்ந்த கேடா மாவட்ட விவசாயிகள் வரி கொடுக்க இயலாமல் தவித்தனர். அரசாங்கத்தின் கருணையை வேண்டி எழுதிய அவர்களுடைய கோரிக்கைக் கடிதங்களைப் புறக்கணிக்கும் அதிகாரிகள் நிலங்களையும் வீடுகளையும் பறிமுதல் செய்யத் தொடங்கினர்.அதன் விளைவாக படேல் பிற வழக்கறிஞர்களை இணைத்துக்கொண்டு ஒரு பெரிய சத்தியாகிரகத்தை அந்த ஊரில் தொடங்கினார்.அத்தருணத்தில் தோரண என்னும் சிற்றூரில் ஒரு ரெவினியு அதிகாரி இருபத்துமூன்று வீடுகளை ஆக்கிரமித்து பறிமுதல் செய்தார்.பெண்கள் அணிந்திருந்த நகைகளையும் பாத்திரம் பண்டங்களையும் கறவை மாடுகளையும் கூட பறிமுதல் செய்தார்.செய்தி கிடைத்ததும் அந்த இடத்துக்கு ஒரு பெண்மணி ஆசிரமத்திலிருந்து புறப்பட்டுச் சென்றார்.பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்தித்து ஆறுதல் சொன்னார்.அவர்கள் சோர்வுறாதபடி அவர்களிடையே சொற்பொழிவாற்றினார்.

ஒரு கவிராயரின் விசித்திர வரலாறு


உ.வே.சாமிநாத ஐயர் எழுதிய என் சரித்திரம் புத்தகத்தில் பல ஊர்ப் பிரயாணங்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை இருக்கிறது.ஓலைச்சுவடிகளுக்காகத் தேடியலைந்தபோது சென்றுவந்த சில ஊர்களைப்பற்றி உ.வே.சா.அதில் குறிப்பிட்டிருக்கிறார்.அவற்றில்.ஆறுமுகமங்கலம் என்னும் ஊருக்குச் சென்றுவந்த அனுபவப்பதிவு மிகவும் சுவாரசியமாக இருந்தது.அது எந்த விதத்திலும் சுவடிகளோடு தொடர்புடையதல்ல. அது அந்தக் காலத்தில் வாழ்ந்த ஒரு கவிராயரைப்பற்றிய குறிப்பு.அவர் பெயர் ஆண்டான் கவிராயர்.

Sunday, 29 September 2024

சாதனையின் பாதையில்

 

ஐன்ஸ்டீனுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் மனத்தில் பதிந்த மிகப்பெரிய அறிவியலாளர் ஸ்டீபன் ஹாகிங். இயற்பியல், அண்டவியல் தொடர்பான ஆய்வுகளை வாழ்நாளின் இறுதிக்காலம் வரைக்கும் அவர் மேற்கொண்டிருந்தார். புவி ஈர்ப்பு தொடர்பாகவும் கருந்துளை கதிர்வீச்சு தொடர்பாகவும் அவர் கண்டறிந்து உலகுக்கு உரைத்த உண்மைகள் விண்வெளி ஆய்வுகளில் ஒரு பெரும்பாய்ச்சலை உருவாக்கியது.

கற்பனையின் பாதை

 

தொகுதியைப் பிரித்து முதல் கவிதையைப் படித்ததுமே, இது எனக்கான கவிதை என்றும் இவர் எனக்கான கவிஞர் என்றும் என் மனம் உணர்ந்துவிட்டது. ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டி, கவிதையைப் படித்தபோது, என்னிடம் சில விஷயங்களைத் தெரிவிப்பதற்காக யாரோ ஒருவர் எனக்கு எதிரில் உட்கார்ந்து உரையாடுவதுபோல உணர்ந்தேன். இதற்குமுன் ஆனந்தகுமார், மதார், பொன்முகலி போன்ற கவிஞர்களின் கவிதைகளை வாசித்தபோது எழுந்த அதே எண்ணத்தை அதியமானின் கவிதைகளும் அளித்தன.

Sunday, 22 September 2024

கத்தி - 1


தனியாக நடப்பதில் ரொம்பவும் சந்தோஷமாய் இருந்தது சிவகாமிக்கு. அம்மா வந்தால் எப்போதும் தொந்தரவுதான். வீட்டில் ஆரம்பித்து வேலங்காடு சேர்கிறவரைக்கும் திட்டிக்கொண்டே வருவாள். தினம்தினமும் திட்டு வாங்கி அம்மா கூட விறகு வெட்டப் போவது என்றாலே சலிப்பு தருகிற விஷயமாகிவிட்டது